டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நியூஷன் நேஷன் கணிப்பும் சொல்லி விட்டது.. தமிழகத்தில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு!

Google Oneindia Tamil News

Recommended Video

    Exit polls 2019 | மீண்டும் பாஜக! ஆனால் தமிழகத்தில் திமுக

    டெல்லி: 7 கட்டங்களாக நடைபெற்று வந்த மக்களவை தேர்தல் இன்றோடு முடிந்துள்ள நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணி அபார வெற்றி பெறும் என நியூஸ் நேஷன் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன.

    முன்னணி தலைவர்களான கருணாநிதி மற்றும் ஜெயலலிதா மறைந்தபின் திமுகவும், அதிமுகவும் சந்தித்துள்ள முதல் மக்களவைத் தேர்தல் இது. இதில் திமுகவே இந்த பந்தயத்தில் வெற்றி பெறும் என பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் வெளிவந்துள்ளது.

    News Nation exit poll.. In TamilNadu People support the DMK

    நியூஸ் நேஷன் எக்ஸிட் போல் முடிவுகளும் இதனையே கூறியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களை பெறும் என நியூஸ் நேஷன் கூறியுள்ளது.

    தமிழகத்தில் திமுகவிற்கு 29 இடம்.. அதிமுகவிற்கு 9 மட்டுமே.. டைம்ஸ் நவ் விஎம்ஆர் சர்வே! தமிழகத்தில் திமுகவிற்கு 29 இடம்.. அதிமுகவிற்கு 9 மட்டுமே.. டைம்ஸ் நவ் விஎம்ஆர் சர்வே!

    அதிமுக இரண்டாம் இடத்தை பிடிக்கும் எனவும் இந்த பட்டியலில் வேறு கட்சிகள் இடம் பிடிக்க வாய்ப்பு இல்லை எனவும் நியூஸ் நேஷன் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி தமிழகத்தில் அதிமுக கூட்டணி அதிகபட்சமாக 15 தொகுதிகளில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எதிர்கட்சியாக உள்ள திமுக தான் கூட்டணி அமைத்து போட்டியிட்டதில் அதிகபட்சம் 23 இடங்கள் வரை வெல்லும் என்றும் கணித்து கூறப்பட்டுள்ளது.

    தற்போது வெளியாகியுள்ள தமிழக மக்களவை தொகுதி தேர்தல்களுக்கான கருத்து கணிப்புகள் பெரும்பாலும் திமுகவிற்கு சாதகமாகவே வெளிவந்துள்ளன. வரும் வியாழனன்று நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையின் போது, தமிழகத்தில் எந்த கட்சியை மக்கள் ஆதரித்துள்ளார்கள் என்பது தெரிய வரும்.

    English summary
    The results of the News Nation exit poll have been announced as the DMK alliance will win in Tamil Nadu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X