என்னாது டெல்லியிலும் ஒரு நயாகரா நீர் வீழ்ச்சியா?.. வைரலாகும் வீடியோ
டெல்லி: டெல்லியில் 12 ஆண்டுகளுக்கு பிறகு அதிகபட்சமான மழை பெய்து தலைநகரமே தண்ணீரால் மிதந்து வரும் நிலையில் இந்த மழை ஒரு செயற்கை நீர்வீழ்ச்சியை உருவாக்கியுள்ளது. இதை எல்லாரும் டெல்லியில் ஒரு நயாகரா நீர் வீழ்ச்சி என நெட்டிசன்கள் வைரலாக்கியுள்ளனர்.
தலைநகர் டெல்லியில் மழையானது வெளுத்து வாங்கி வருகிறது. அவ்வப்போது வெயில் அடித்தாலும் மழை பெய்யும் போது அதிக கனமழையை கொடுக்கிறது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இடி மின்னலுடன் நகரம் முழுவதும் மழை பெய்து வருவதால் சாலைகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களிலும் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது.

கழிவுநீர் குழாய்
நகரில் ஆங்காங்கே கழிவுநீர் குழாயில் அடைப்பு இருந்ததால் பல இடங்களில் மழைநீரோடு கழிவுநீரும் கலந்தது. இதனால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 11.21 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

செப்டம்பர் மாதம்
கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த செப்டம்பர் மாதம் மழையானது பதிவாகியுள்ளது. இன்னும் டெல்லியில் மழை நீடிக்கும். செப்டம்பர் 7 ஆம் தேதிக்கு மேல்தான் மழையானது குறையும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 2010 ஆம் ஆண்டு 11 செ.மீ. மழையும் 2020 ஆம் ஆண்டு 12.68 செ.மீ. மழையும் 1963 ஆம் ஆண்டு 17.26 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

டெல்லியில் மழை
ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 125.1 மி.மீ மழையானது டெல்லியில் பதிவாகும். ஆனால் நேற்று ஒரே நாளில் 112.1 மி.மீ. (11.21 செமீ) மழை பதிவாகியுள்ளது என்றால் செப்டம்பர் மாதம் பெய்ய வேண்டிய மழையில் 90 சதவீதம் மாதத்தின் முதல் நாளில் பெய்து விட்டது. இதனிடையே வெள்ளத்தில் மிதக்கும் சாலைகள் குறித்த படங்கள், வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மழைநீர்
அந்த வகையில் டெல்லி மேம்பாலத்தில் இருந்து மழை நீர் அருவி போல் கொட்டுகிறது. இதை காருக்குள் உட்கார்ந்து கொண்டு ஒருவர் வீடியோ எடுத்து அதை வைரலாக்கியுள்ளார். இதை பார்த்த நெட்டிசன் ஒருவர் டெல்லியில் ஒரு நயாகரா நீர் வீழ்ச்சி என்கிறார். இன்னொருவர் ஆஹா இது நிஜமாகவே நீர்வீழ்ச்சி போல் இருக்கிறது என்றார். அது போல் இன்னொருவர் இது மகிழ்ச்சிக்குரிய விஷயம் அல்ல. எச்சரிக்கை தரும் விஷயமாகும் என்கிறார். இன்னொருவரோ சார் நீங்கள் நீர்வீழ்ச்சியில் குளிக்க நீச்சலடிக்க மலை மீதெல்லாம் ஏற வேண்டிய அவசியம் இல்லை. காரில் உட்கார்ந்து கொண்டே செய்யலாம் என்கிறார்.
-
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications