ஹாங்காங்கில் நிரவ் மோடியின் ரூ.250 கோடி சொத்துகள் முடக்கம். . அமலாக்கத்துறை அதிரடி . .

Subscribe to Oneindia Tamil

புதுடெல்லி: பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடிக்கு சொந்தமான ரத்தினங்கள், நகைகள் என ஹாங்காக்கில் உள்ள மொத்தம் 250 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி மோசடி செய்துவிட்டு, குஜராத் வைர வியாபாரி நிரவ் மோடி, 2018-ம் ஆண்டு லண்டனுக்கு தப்பிச் சென்றார்.

இதையடுத்து நிரவ் மோடியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு ரொக்கப்பணம், டெபாசிட்கள், சொகுசு கார், இறக்குமதி செய்யப்பட்ட கைக்கடிகாரங்கள், வீடுகள், நிலம் என பலதரப்பட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டன.

 லண்டனில் நிரவ் மோடி

லண்டனில் நிரவ் மோடி


மேலும், அவரது நிறுவனத்தின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. லண்டன் போலீசாரால் கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட நிரவ் மோடியை இந்தியாவுக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தும் பணியிலும் அமலாக்கப்பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். அதன் அடிப்படையில் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 இறுதி கட்டத்தில் வழக்கு

இறுதி கட்டத்தில் வழக்கு

ஆனால் இந்த வழக்கை எதிர்த்து அவர் லண்டன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின் போது நிரவ் மோடி தரப்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர், ''நிரவ் மோடியை அடைக்க தயார் படுத்தப்பட்டுள்ள மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் கொரோனா பரவல் குறித்த அச்சம் உள்ளது என்றும், அங்குள்ள சிறையில் நிரவ் மோடி அடைக்கப்பட்டால் அவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்படலாம் என்றும் அவர் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்புள்ளது'' எனக் கூறினார். நிரவ் மோடி மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட வாதத்தை ஏற்றுக் கொண்ட லண்டன் நீதிமன்றம் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையும் தற்போது இறுதி கட்டத்தை எட்டி விட்டது.

 ரூ.250 கோடி சொத்துகள் முடக்கம்

ரூ.250 கோடி சொத்துகள் முடக்கம்

இந்த நிலையில், ஹாங்காக்கில் நிரவ் மோடிக்கு சொந்தமான சொத்துக்கள், நகைகள், வங்கி இருப்புகள் ஆகியவற்றை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதன் மதிப்பு ரூ.253.62 கோடியாகும். நிரவ் மோடிக்கு சொந்தமான இந்தியாவிலும் வெளிநாட்டிலும் என ரூ.2 ஆயிரத்து 650 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை இதுவரை முடக்கியுள்ளது. நிரவ் மோடியின் சில சொத்துக்கள், தனியார் பெட்டகங்களில் கிடக்கும் ரத்தினங்கள் மற்றும் நகைகள் மற்றும் வங்கி இருப்புக்கள் ஆகியவை கண்டறியப்பட்டு சட்ட விரோத பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) பிரிவுகளின் கிழ் முடக்கப்பட்டுள்ளதாக அமலாகக்த்துறை தெரிவித்துள்ளது.

 வங்கிகளிடம் ஒப்படைப்பு

வங்கிகளிடம் ஒப்படைப்பு

இதுபோக, நிரவ் மோடி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் என ரூ.1389 கோடி மதிப்புடைய சொத்துகளை தப்பியோடிய தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்து வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+