தேசிய கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியல்.. முதலிடத்தை தட்டித் தூக்கிய ஐஐடி மெட்ராஸ்.. முழு லிஸ்ட் இதோ!
டெல்லி: மத்திய கல்வி அமைச்சகம் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், ஐஐடி மெட்ராஸ் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து, 6வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தேசிய கல்வி நிறுவனத்தின் 13 பிரிவுகள் கொண்ட தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார். இந்த தரவரிசைப் பட்டியல் என்ஐஆர்எஃப் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒட்டுமொத்த செயல்பாட்டுப் பிரிவில் மெட்ராஸ் ஐஐடி முதலிடத்தைப் பிடித்துள்ளது. தொடர்ந்து 6 வது ஆண்டாக இக்கல்வி நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. பெங்களூர் ஐஐஎஸ்சி நிறுவனம் 2 ஆம் இடத்தையும், மும்பை ஐஐடி மூன்றாம் இடத்தையும், டெல்லி ஐஐடி நான்காம் இடத்தையும் பெற்றுள்ளன.

பொறியியல் கல்லூரிகள் தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடத்தையும், டெல்லி ஐஐடி இரண்டாம் இடத்தையும், மும்பை ஐஐடி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. மாநில பல்கலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முதலிடம் பிடித்துள்ளது. மேற்குவங்கத்தின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் இரண்டாமிடத்தையும் பிடித்துள்ளன. முழு விவரங்கள் இதோ..
பார்மஸி
ஜாமியா ஹம்தார்டு, நியூடெல்லி
தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஹைதராபாத்
பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகம், பிலானி
ஜேஎஸ்எஸ் மருந்தியல் கல்லூரி, ஊட்டி
ரசாயன தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், மும்பை
ஜேஎஸ்எஸ் மருந்தியல் கல்லூரி, மைசூர்
பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர்
மணிபால் மருத்துவ அறிவியல் கல்லூரி, மணிபால்
தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மொஹாலி
எஸ்கேவிஎம் நர்சி மோஞ்சி மேலாண்மைக் கல்வி நிறுவனம், மும்பை
பல்கலைக்கழகங்கள்
இந்திய அறிவியல் நிறுவனம், பெங்களூர்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், நியூடெல்லி
ஜாமியா மில்லியா இஸ்லாமியா, நியூடெல்லி
மணிபால் உயர்கல்வி நிறுவனம், மணிபால்
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரணாசி
டெல்லி பல்கலைக்கழகம், நியூடெல்லி
அமிர்த விஸ்வா வித்யாபீடம், கோயம்புத்தூர்
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், அலிகர்
ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், கொல்கத்தா
வேலூர் தொழிநுட்ப பல்கலைக்கழகம், வேலூர்
மேலாண்மை
இந்திய மேலாண்மைக் கழகம் அகமதாபாத் (ஐஐஎம்ஏ)
இந்திய மேலாண்மைக் கழகம் பெங்களூர் (ஐஐஎம்பி)
இந்திய மேலாண்மைக் கழகம் கோழிக்கோடு (ஐஐஎம்கே)
இந்திய தொழில்நுட்பக் கழகம் டெல்லி (ஐஐடிடி)
இந்திய மேலாண்மைக் கழகம் கொல்கத்தா (ஐஐஎம்சி)
இந்திய மேலாண்மைக் கழகம் மும்பை
இந்திய மேலாண்மைக் கழகம் லக்னோ
இந்திய மேலாண்மைக் கழகம் இந்தூர்
எக்ஸ்எல்ஆர்ஐ-சேவியர் மேலாண்மை பள்ளி, ஜம்ஷேத்பூர்
இந்திய தொழில்நுட்பக் கழகம் பாம்பே
அனைத்துக் கல்வி நிறுவனங்கள்
இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் (ஐஐடிஎம்)
இந்திய அறிவியல் கழகம், பெங்களூர்
இந்திய தொழில்நுட்பக் கழகம் பாம்பே
இந்திய தொழில்நுட்பக் கழகம் டெல்லி
இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர்
இந்திய தொழில்நுட்பக் கழகம் கரக்பூர்
அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம், நியூடெல்லி
இந்திய தொழில்நுட்பக் கழகம் ரூர்க்கி
இந்திய தொழில்நுட்பக் கழகம் குவாஹாட்டி
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், நியூடெல்லி
கல்லூரிகள்
இந்து கல்லூரி, டெல்லி
மிராண்டா ஹவுஸ், டெல்லி
செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி, டெல்லி
ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா சென்டெனரி கல்லூரி, கொல்கத்தா
அட்மா ராம் சனாதன் தர்ம் கல்லூரி, டெல்லி
செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரி, கொல்கத்தா
பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர்
லயோலா கல்லூரி, சென்னை
கிரோரி மால் கல்லூரி, டெல்லி
லேடி ஸ்ரீ ராம் மகளிர் கல்லூரி, டெல்லி
கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல்
இந்திய தொழில்நுட்பக் கழகம் ரூர்க்கி
இந்திய தொழில்நுட்பக் கழகம் கரக்பூர்
தேசிய தொழில்நுட்பக் கழகம் கேலிகட்
இந்திய பொறியியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம், சிப்பூர்
கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி, நியூடெல்லி
விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகள்
இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம், நியூடெல்லி
ஐசிஏஆர்- தேசிய பால் ஆராய்ச்சிக் கழகம், கர்னல்
பஞ்சாப் வேளாண்மைப் பல்கலைக்கழகம், லுதியானா
பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், வாரணாசி
இந்திய கால்நடை ஆராய்ச்சிக் கழகம், இஜாத்நகர்
மருத்துவம்
அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம், நியூடெல்லி
முதுநிலை மருந்தகக் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம், சண்டிகர்
கிறிஸ்டியன் மெடிக்கல் கல்லூரி, வேலூர்
தேசிய மன ஆரோக்கிய மற்றும் நரம்பியல் அறிவியல் கழகம், பெங்களூர்
ஜவஹர்லால் முதுநிலை அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்ச கழகம், புதுச்சேரி
சட்டம்
தேசிய சட்டக் கல்லூரி, செல்லி
நல்சர் பல்கலைக்கழகம், ஹைதராபாத்
மேற்கு வங்க தேசிய நீதி அறிவியல் பல்கலைக்கழகம், கொல்கத்தா
சிம்பயாசில் சட்டப் பள்ளி, புனே
பல்
சவிதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் கழகம், சென்னை
மணிபால் பல் அறிவியல் கல்லூரி, மணிபால்
மெளலானா ஆசாத் பல் அறிவியல் கழகம், நியூடெல்லி
கிங் ஜார்ஜ்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம், லக்னோ
டாக்டர் டி.ஒய். பாட்டில் வித்யபீத், புனே
புதுமை
இந்திய தொழில்நுட்பக் கழகம் பாம்பே
இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ்
இந்திய தொழில்நுட்பக் கழகம் ஹைதராபாத்
இந்திய அறிவியல் கழகம், பெங்களூர்
இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர்
இந்திய தொழில்நுட்பக் கழகம் ரூர்க்கி
இந்திய தொழில்நுட்பக் கழகம் டெல்லி
இந்திய தொழில்நுட்பக் கழகம் மண்டி
இந்திய தொழில்நுட்பக் கழகம் கரக்பூர்
அண்ணா பல்கலைக்கழகம்
திறந்தவெளி பல்கலைக்கழகங்கள்
இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் (ஐஜிஎன்ஒயூ), நியூடெல்லி
நேதாஜி சுபாஷ் திறந்தவெளி பல்கலைக்கழகம், கொல்கத்தா
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் திறந்தவெளி பல்கலைக்கழகம், அகமதாபாத்
திறன் பல்கலைக்கழகங்கள்
சிம்பயாசிஸ் திறன் மற்றும் தொழில்முறை பல்கலைக்கழகம், புனே
ஸ்ரீ விஸ்வகர்மா திறன் பல்கலைக்கழகம், பல்வால்
பாரதிய திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகம், ஜெய்பூர்
ஆராய்ச்சிக் கழகங்கள்
இந்திய அறிவியல் கழகம், பெங்களூர்
இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ்
இந்திய தொழில்நுட்பக் கழகம் டெல்லி
இந்திய தொழில்நுட்பக் கழகம் பாம்பே
இந்திய தொழில்நுட்பக் கழகம் கரக்பூர்
மாநில பொது பல்கலைக்கழகங்கள்
அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், கொல்கத்தா
சாவித்ரிபாய் பூலே புனே பல்கலைக்கழகம், புனே
கல்கத்தா பல்கலைக்கழகம், கொல்கத்தா
பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர்
ஓஸ்மானியா பல்கலைக்கழகம், ஹைதராபாத்
ஆந்திரா பல்கலைக்கழகம், விசாகப்பட்டிணம்
பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்
கேரளா பல்கலைக்கழகம், திருவனந்தபுரம்
கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கொச்சின்
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications