அழகு மகளுடன்.. ஒரு சூப்பர் போஸ்.. டென்ஷன்கார நிர்மலா சீதாராமனிடமிருந்து வெளிவந்த பாசக்கார அம்மா

மகள்கள் தினத்தையாட்டி நிர்மலா சீதாராமன் ட்வீட் போட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    #Daughtersday | நிர்மலா சீதாராமனிடமிருந்து வெளிவந்த பாசக்கார அம்மா-வீடியோ

    டெல்லி: இளமை ததும்பும் நிர்மலா சீதாராமன், தன் மழலையை இடுப்பில் தூக்கி வைத்து கொண்டிருக்கும் போட்டோ வைரல் ஆகி வருகிறது.

    நேற்று நாடு முழுவதும் தேசிய மகள்கள் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சோஷியல் மீடியாவில், பலரும் தங்களது மகள்களின் போட்டோக்களை பதிவிட்டு,வாழ்த்து சொல்லி தங்கள் அவாவை வெளிப்படுத்தினர்.

    Nirmala Seetharaman tweet about daughters day

    இதில் பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் இறங்கி தங்கள் மகள்களின் போட்டோக்களை பதிவிட்டனர். இதில் அதிகம் பேசப்பட்டது நாட்டின் 2 பெண் அரசியல்வாதிகளின் ட்வீட்தான்!

    காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா, தன் மகள், மிரயா வாத்ரா, பனியில் நனைவது போன்ற ஒரு போட்டோவை பதிவிட்டார். அது மட்டுமல்ல, "ஒவ்வொரு நாளும் மகள்களின் தினமே' என்றும் அதற்கு கீழே பதிவிட்டிருந்தார்.

    அதேபோல, பாஜகவி மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான, நிர்மலா சீதாராமன், தன் மகளின் போட்டோவை பதிவிட்டிருந்தார். அது பழைய போட்டோதான். இளமை தோற்றத்துடன் காணப்படுகிறார் நிர்மலா. பாப்-கட்டிங் செய்த தன் மகளை இடுப்பில் தூக்கி வைத்து கொண்டிருக்கிறார்.

    அதற்கு கீழே, "என் மகளை பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கிறது. அவள் என் தோழி, என் வழிகாட்டி"என்று பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

    எத்தனை யுகங்கள் ஆனாலும், இனம், மொழி, நாடு கடந்து இன்னமும் தன் இயல்பில் இருந்து மாறாமல், வீரியத்துடன் நடைபோட்டு கொண்டிருப்பது தாய்மை மட்டுமே.. அதற்கு பிரியங்காவும், நிர்மலாவும் விதிவிலக்கல்ல!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+