டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெண் நிருபரை பார்த்து "அடியே போடி" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ

Google Oneindia Tamil News

Recommended Video

    பெண் நிருபரை பார்த்து 'அடியே போடி' என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்

    டெல்லி: பெண் நிருபரை பார்த்து "அடியே, போடி.." என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைத்த விவகாரம் தற்போது சர்ச்சைகளுக்கு காரணமாகியுள்ளது.

    பொருளாதாரம் மந்த நிலையில் சென்று கொண்டுள்ள சூழ்நிலையில், கடும் பணிச் சுமைக்குள் சிக்கியுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பட்ஜெட்டில் அறிவித்த பல திட்டங்களையும், இப்போது மறுபரிசீலனை செய்து வருகிறார் அவர்.

    Nirmala Sitharaman murmur Adiye Podi When a lady reporter ask a question

    வாராவாரம் அவர் அளித்துவரும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, பட்ஜெட்டில் அறிவித்த பல வரிகளை மாற்றியமைத்து வருவதை பார்க்க முடிகிறது. பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்த, எக்ஸ்ட்ரா டைம் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது டீம்.

    இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியின்போது, பெண் நிருபர் ஒருவர், நீங்கள் எப்படி, உங்கள் வருவாய் இலக்கை எட்டப்போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அவ்வப்போது பல வரி சலுகைகளை அறிவித்து வரும் நிலையில், வருவாய் இலக்கை எப்படி எட்ட முடியும் என்பதுதான் நிருபரின் சந்தேகத்திற்கு காரணம்.

    ஆனால் இந்த கேள்வியை எதிர்கொண்டதுமே, விரக்தியடைந்துவிட்டார், நிர்மலா சீதாராமன். அவர் வாய், "அடியே, போடி" என முனுமுனுத்தது. இதை பிரஸ் மீட் நேரத்தில் யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால், நிர்மலா சீதாராமன் பேட்டி வீடியோவாக வெளியான பிறகு, சிலர் இதை கவனித்துவிட்டனர். இப்போது சமூக வலைத்தளங்களில் அது வைரலாக பரவி வருகிறது.

    'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு ஓடி வரும் ட்ரம்ப்.. மோடியுடன் கைகோர்ப்பு.. பின்னணியில் செம ஸ்கெட்ச்!'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு ஓடி வரும் ட்ரம்ப்.. மோடியுடன் கைகோர்ப்பு.. பின்னணியில் செம ஸ்கெட்ச்!

    நிர்மலா சீதாராமன் கடும் பணிச்சுமையில் இருக்கிறார், என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். பணிச்சுமை, விரக்தி போன்றவற்றால், யதேர்ச்சையாக இப்படி நிர்மலா சீதாராமன் சொல்லிவிட்டார். இதை அப்படியே விட்டுவிடலாம் என்கிறார்கள் அவர்கள்.

    இந்த வீடியோவின் அடுத்த சில விநாடிகளில், கேள்வி எழுப்பிய பெண் நிருபரின் பெயரை குறிப்பிட்டுதான் பதில் சொல்கிறார், நிர்மலா சீதாராமன். எனவே பர்சனலாக அந்த பெண் நிருபருடன், நிர்மலா சீதாராமனுக்கு அறிமுகம் இருக்கும் என தெரிகிறது. ஆனால், வீட்டில் பேசிக்கொள்வதை போல, ஒரு மத்திய அமைச்சர் பிரஸ் மீட்டில் பேசுவது சரியா என்பதே கேள்வி!

    English summary
    Finance Minister Nirmala Sitharaman murmur "Adiye Podi" When a lady reporter asked a question to her.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X