"நீட்' வினாத்தாள் கசிவால் மாணவர்களுக்கு படிக்க கூடுதல் நேரம் கிடைத்தது.. நிர்மலா சீதாராமன் சமாளிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ''மாணவர்கள் பலரும் என்ன சொல்கிறார்கள் என்றால் வினாத்தாள் கசிவு பற்றி அறிந்ததும் நாங்கள் கவலைப்பட்டோம். அதன்பிறகு அந்த சூழலை பயன்படுத்தி இன்னும் சிறப்பாக தேர்வுக்கு தயாராகினேன். அதன்மூலம் எனது மதிப்பெண் அதிகரித்தது என்று கூறும் இளைஞர்கள் உள்ளனர். இதனை சவாலாக ஏற்றுக்கொண்டு சிறப்பாக வெற்றி பெற்ற இளைஞர்களும் இருக்கிறார்கள்'' என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

'நீட்' வினாத்தாள் கசிவுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நாளுக்கு நள் தீவிரமாகி வருகிறது.

nirmala-sitharaman-says-that-students-tells-my-performance-has-improved-due-to-paper-leak-after-i-t

மத்திய அரசு சார்பில் 2 கட்டங்களாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து தோல்வியை தழுவி உள்ளன. இன்று 3வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

மத்தி கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்வோம் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். இது மத்திய அருசுக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தான் டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்தப்படும் போராட்டம் பற்றி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இன்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு நிர்மலா சீதாராமன் கூறியதாவது: ''இந்த விவகாரத்தை பிரதமர் மோடி கையாண்டு வருகிறார். ஒரு தேர்வின் புனித தன்மையை கெடுக்கும் வகையில் வினாத்தாள் கசிவில் ஈடுபட்டவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுவதை அவர் உறுதி செய்துள்ளார். வினாத்தாள் கசிவில் தொடர்புடையவர்கள் யாரும் தப்பிக்க முடியாது.

மாணவர்கள் பலரும் என்ன சொல்கிறார்கள் என்றால் வினாத்தாள் கசிவு பற்றி அறிந்ததும் நாங்கள் கவலைப்பட்டோம். அதன்பிறகு அந்த சூழலை பயன்படுத்தி நான் இன்னும் சிறப்பாக தேர்வுக்கு தயாராகினேன். அதன்மூலம் எனது மதிப்பெண் அதிகரித்தது என்று கூறும் இளைஞர்கள் உள்ளனர். இதனை சவாலாக ஏற்றுக்கொண்டு சிறப்பாக வெற்றி பெற்ற இளைஞர்களும் இருக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி நீட் மறுதேர்வு விரைவாக நடத்தப்பட்டுள்ளது. அதன் தேர்வு முடிவுகள் சரியான நேரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் தங்களின் எதிர்கால கல்வியை சரியான நேரத்தில் தொடங்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசு சரியான நேரத்தில் கைது நடவடிக்கைக, மறுதேர்வு, மறுதேர்வு முடிவுகள் சார்ந்த விஷயங்களை செய்யாமல் இருந்திருந்தால் தற்போது நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும். ஆனால் இப்போது இளைஞர்கள் தங்கள் உயர்கல்விக்கான கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுத்து செல்லும் சூழல் உருவாகியுள்ளது'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+