ஒரே டென்ஷன்! பரபரத்த பார்லிமெண்ட்.! ஒரு மணி நேரம்! "இந்தியா" கூட்டணியை விளாசிய நிர்மலா சீதாராமன்
டெல்லி: இன்று நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது உரையாற்றிய நிர்மலா சீதாராமன் திமுக மட்டுமின்றி ஒட்டுமொத்த "இந்தியா" கூட்டணியையும் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு முதலில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில், இப்போது மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

"இந்தியா" கூட்டணி எம்பிக்கள் இணைந்து இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இதன் மீதான விவாதம் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வருகிறது. இதில் எதிர்க்கட்சிக்கும் ஆளும் தரப்பிற்கும் இடையே வார்த்தை மோதல்கள் தொடர்ந்து வந்தன.
நிர்மலா சீதாராமன்: இதற்கிடையே இன்றைய தினம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றினார். அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சில் அவர் பல நேரங்களில் திமுகவை விமர்சித்துப் பேசினார். இருப்பினும், அதேநேரம் அவர் "இந்தியா" கூட்டணி எம்பிக்களையும் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார்.
யுபிஏ கூட்டணி 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது. ஆனால், அவர்கள் 10 ஆண்டுகளையும் வீணடித்து விட்டனர் என்று அவர் கடுமையாகச் சாடினார். அப்போது யுபிஏ என்ற பெயரில் இருந்த பெரும்பாலான கட்சிகள் இணைந்து தான் இப்போது "இந்தியா" கூட்டணியை உருவாக்கியுள்ளது. குறிப்பிடத்தக்கது.
வெளிநடப்பு: சுமார் ஒரு மணி நேரம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எதிர்க்கட்சி கூட்டணியைக் கடுமையாகச் சாடினார். அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, திரிணாமுல் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் வெளிநடப்பும் செய்தனர்.
நிர்மலா சீதாராமன் பேசுகையில், "ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு மக்கள் மீது நம்பகத்தன்மை இல்லை.. யுபிஏ என்றாலே அது ஊழலையும் ஏமாற்றுவதையும் தான் மக்களுக்கு நினைவூட்டுவதாக இருக்கிறது. இதன் காரணமாக எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு 'இந்தியா' என்ற பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அந்த கூட்டணியில் உள்ள கட்சிகளே ஒரு சில மாநிலத்தில் நேர் எதிராக இருக்கிறார்கள்.
"இந்தியா" கூட்டணி: இது ஒரு வினோதமான கூட்டணி. பஞ்சாபில், காங்கிரஸும் ஆம் ஆத்மியும் போட்டிப் போடுகிறது. மேற்கு வங்கத்தில், திரிணாமுல், இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே போட்டி இருக்கிறது. கேரளாவில், இடதுசாரிகள் காங்கிரஸ் இடையே மோதல் இருக்கிறது. காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியும், பிடிபி கட்சியும் எதிர் எதிராக இருக்கிறது. ஆனால், இவர்கள் கூட்டணி என்கிறார்கள்.
கர்நாடகாவின் சுகாதாரத்துறை அமைச்சர் டெல்லியில் பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்ட மொஹல்லா கிளினிக்குகளைப் பார்க்க இங்கு வந்தார். இருப்பினும், இதைப் பார்த்துவிட்டு, இதில் சிறப்பாக எதுவும் இல்லை, நாங்கள் ஏமாற்றமடைந்துவிட்டோம் என்கிறார். இப்படிதான் அவர்கள் கூட்டணி என்பது இருக்கிறது.
வளர்ச்சி: யுபிஏ 10 ஆண்டுகளை முழுவதுமாக வீணடித்துவிட்டது, ஆனால் இப்போது நிலைமை மாறியிருக்கிறது.. ஒவ்வொரு நெருக்கடியும் இப்போது சீர்திருத்தமாக மாறியிருக்கிறது. என்டிஏ ஆட்சியில் பல வளர்ச்சி நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். நமது நாட்டில் கொண்டு வரப்பட்ட யுபிஐ திட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், மத்திய கிழக்கு நாடுகளிலும் நம்மால் இதைப் பயன்படுத்த முடியும்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவியுள்ளோம். பல துறைகளில் இறக்குமதி செய்து கொண்டிருந்த நிலையில், இப்போது நிலைமையை மாற்றி ஏற்றுமதி செய்யும் நிலைக்கு வளர்ந்துள்ளோம். பொதுத் துறை வங்கிகள் ஒரு லட்சம் கோடி லாபமடைந்துள்ளன. ஊழல், மோசடி காரணமாக முந்தைய காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கே பெரியளவில் பலன் இருந்தது. ஆனால், இதை நிறுத்தி ₹ 2.76 லட்சம் கோடி என்ற சூழலை உருவாக்கியுள்ளோம்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications