எனக்கு என்னாச்சு.. நான் எங்கிருக்கிறேன்.. எல்லாத்தையும் வெளியிடுவேன்.. டேட் குறித்த நித்யானந்தா!
டெல்லி: மருத்துவ அறிக்கையை எப்போது வெளியிடுவார் என்பது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் நித்யானந்தா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து நித்யானந்தாவின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறுகையில், பரமசிவனின் ஆசிர்வாதம்! சமாதி குறித்து சமாதியில் இருந்து மற்றொரு லைவ் கவரேஜ் தருகிறேன். பரமசிவனின் அறிவு மற்றும் சக்திகளின் உயர்ந்த வெளிப்பாடுகளுக்கு உடல் சீரமைக்கிறது.
அதிர்ஷ்டவசமாக எனது முழு உடலும் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறது. பல நோயறிதல் முறைகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சமாதி நிலையில் இருப்பது என்பது நோயல்ல என்பதை ஆவணங்களுடன் நிரூபித்துவிட்டாயிற்று.

இதயம் மூளை
எனது இதயம் மற்றும் மூளையின் செயல்பாடுகள் தொடர்ந்து பதிவு செய்யப்படுகின்றன. நான் முழுக்க முழுக்க ஐசியூ செட்டப்பில்தான் இருக்கிறேன். சமாதி என்பது கோமா நிலை அல்ல. என் உடல் சரியானதும் வழக்கம்போல் சத்சங்கங்கள் கொடுக்கும் போது நான் இந்த உலகிற்கு மருத்துவ அறிக்கைகளை வெளியிடுவேன்.

அசதியே இல்லை
உணவோ திரவங்களோ அருந்தாவிட்டாலும் எனக்கு அசதி என்பதே இல்லை. எனக்கு பொழுதுபோக்கு இல்லை. தருமபுரம் ஸ்ரீ சுவாமிநாதனின் தேவாரத்தை கேட்பேன். போரடிக்கவில்லை. சமாதி என்பது மனம் சார்ந்த நிலை அல்ல, உணர்வுபூர்வமான நிலை. உடல், மனம், உணர்ச்சிகளுக்கு அப்பால் உள்ளது. எனக்கு தனிப்படட ஆர்வமும் நோக்கங்களும் இல்லை.

தனிப்பட்ட யோசனை
என்னை பற்றிய தனிப்பட்ட யோசனை அல்லது கருத்து அல்லது அறிவாற்றல் கூட என்னிடம் இல்லை. சமாதி என்பது ஒரு தீவிர ஆன்மீக நச்சு நீக்கம் ஆகும். இப்போது வரை பல ஆய்வுகளை மருத்துவ ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் செய்து ஆவணங்களை வெளியிட்டுள்ளோம். நான் அடுத்த சில நாட்களில் சத்சங்கம் செய்ய திரும்பி வருவேன்.
Recommended Video

மருத்துவ அறிக்கை
சமாதி நிலையின் போது மட்டும் எனது உடலை மற்றவர்கள் தொடாமல் இருக்க வேண்டும். அனைத்து மருத்துவர்களும் எனது சீடர்களும் அந்த நிலையை புரிந்து கொண்டு என் உடலை தொடாமல் உள்ளார்கள் என்றார். மருத்துவ அறிக்கையை எப்போது வெளியிடுவார் என்பதை நித்யானந்தா அறிவித்துள்ளது நெட்டிசன்களை குழப்பமடைய செய்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது உடலுக்கு என்ன ஆச்சு என்பது குறித்தும் உடல் உறுப்புகளின் நிலை என்ன என்பது குறித்தும் நித்யானந்தா வெளியிட்டிருந்தார். அதில் எல்லா உறுப்புகளும் நன்றாக இருக்கிறது எனும் போது புதிய மருத்துவ அறிக்கையில் என்ன இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications