என் உயிர் திருவண்ணாமலையில்தான் போக வேண்டும்.. நித்யானந்தா அடம்?.. தமிழகம் வருகிறாரா?
டெல்லி: என் உயிர் திருவண்ணாமலையில்தான் போக வேண்டும் என நித்யானந்தா அடம் பிடிப்பதாகவும் அவரை தமிழகம் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை சீடர்கள் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நித்யானந்தாவுக்கு என்னாச்சு என்பது குறித்துதான் ஊரெல்லாம் பேச்சாக இருக்கிறது. அவர் கோமாவில் இருக்கிறார், இல்லை இல்லை இறந்துவிட்டார் என்றெல்லாம் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
Recommended Video
இந்த நிலையில் நித்யானந்தா உயிருடன் இருப்பதாக தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர் ஒரு பேப்பரில் தனது பெயரையும் சிவனின் பெயரையும் தேதி இந்திய நேரத்துடன் குறிப்பிடும் புகைப்படங்கள் வெளியாகின.

உருவம்
ஆனால் அதில் அவரது கை மாத்திரமே தெரியும். உருவம் தெரியாது. அண்மையில் வெளியான ஒரு பேஸ்புக் போஸ்டில் தான் கோமா நிலையில் இல்லை, தான் இருப்பதற்கு பெயர் சமாதி நிலை. அதில் எனது இதயம், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகள் அத்தனையும் இயங்கும். இவை எல்லாம் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் நித்யானந்தா தெரிவித்திருந்தார்.

சமாதி நிலை
நித்யானந்தா சமாதி நிலையில் இருக்கிறார் என்றால் அந்த நிலையை புகைப்படம் எடுத்து காண்பிக்கலாமே, கை வரை காட்டும்போது சமாதி நிலையை காட்டாததால் சமூகவலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. இந்த நிலையில்தான் நித்யானந்தா குணம் பெற வேண்டிய திருவண்ணாமலை அருணகிரி யோகேஸ்வரர் சமாதியில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.

நித்யானந்தா
இதை புகைப்படமாக எடுத்து நித்யானந்தாவுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். இதுகுறித்து நித்யானந்தாவுக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில் நித்யானந்தாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பது உண்மைதான். கல்லீரல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் ஆலோசனை அளித்தனர்.

உடல் உறுப்புகள்
ஆனால் தனது உடலில் உறுப்புகளை அகற்றுவதற்கு நித்யானந்தா மறுத்துவிட்டார். மேலும் தனது உடல் சோர்வாக இருப்பதற்கு ரத்தம் ஏற்றுவதாக மருத்துவர்கள் கூறியும் அதையும் நித்தி மறுத்துவிட்டார். மேலும் திருவண்ணாமலையில் அருணகிரி யோகேஸ்வரரை தரிசிக்க வேண்டும்.

பிறந்த மண்
தனது உயிரே போனாலும் அது நான் பிறந்த மண்ணும் அக்னி ஸ்தலங்களில் ஒன்றுமான திருவண்ணாமலையில்தான் பிரிய வேண்டும் என்றெல்லாம் தெரிவிக்கிறார். நாங்கள் சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. கைலாசாவின் நிர்வாகிகள், சீடர்கள் என பெரும்பாலானோர் சொல்லியும் அவர் கேட்கவில்லை.

தமிழகத்திற்கு அழைத்து வர திட்டம்
இதனால் அவரை தமிழகத்திற்கு அழைத்து வரும் முயற்சியில் அரசியல்வாதிகள் சிலரிடம் பேசி வருகிறோம். அவர்களும் நம்பிக்கை அளிக்கும் படியான உத்தரவை தந்துள்ளார்கள். உத்தரவு கிடைத்தவுடன் நித்யானந்தாவின் விருப்பப்படி அவரை தமிழகத்திற்கு அழைத்து வருவோம் என சீடர்கள் சிலர் தெரிவித்துள்ளார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications