நான் இந்தியாவில் லேண்டானாதான் கொரோனா ஒழியும்.. கலர் கலர் லென்ஸுடன் அம்மன் கெட்டப்பில் நித்தி!
டெல்லி: நான் இந்தியாவில் கால் வைத்தால்தான் கொரோனா தொற்று ஒழியும் என நித்தியானந்தா புதிதாக ஒரு கருத்தை சொல்லி சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஏற்கெனவே பெருமாள் வேடமணிந்த புகைப்படங்களை வெளியிட்ட அவரை பொதுமக்கள் இணையத்தில் வறுத்தெடுத்தார்கள்.
நித்தியானந்தா பிடதி ஆசிரமத்தை நடத்தி வந்த போதிலிருந்தே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்தார். கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், பாலியல் புகார்கள் என பல்வேறு புகார்களில் சிக்கினார்.
இந்த வழக்குகளில் இருந்து தப்ப அவர் 4 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டு கைலாசா என்ற புதிய நாட்டை அறிவித்தார். இந்த நாட்டில் முதலீடு செய்யவும் தொழில் தொடங்கவும் இளைஞர்கள் வருமாறு அழைத்தார்.

இளைஞர்கள்
இளைஞர்கள் நேராக ஆஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டால் அங்கிருந்து தனிவிமானம் மூலம் கைலாசாவுக்கு அழைத்து செல்வேன் என தெரிவித்திருந்தார். தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தாலும் தினந்தோறும் பக்தர்களுக்கு சத்சங்கம் நடத்த தவறியதில்லை. நான் கைலாசாவில் தனிமைப்படுத்திக் கொண்ட போது அனைவரும் சிரித்தார்கள்.

இந்தியா
ஆனால் இன்றோ கொரோனா தொற்று இந்தியாவில் ஏற்பட்டதால் ஊரடங்கு போடப்பட்டு அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி தனிமையில் இருக்கிறார்கள் என பேசியிருந்தார். தனது கோரிக்கையை ஏற்று ஒரு நாள் சூரியன் லேட்டாக உதித்ததாகவும் அவர் பித்தலாட்டை அரங்கேற்றினார்.

புகைப்படம்
அண்மையில் ஏழுமலையான் போல் வேடமணிந்து புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். தற்போது குறி சொல்லும் அம்மன் வேடத்தை அணிந்துள்ளார். அடர்ந்த புருவத்துடன் கண்களில் கலர் லென்ஸுடன் தோன்றிய நித்தியிடம் கொரோனா பாதிப்பு இந்தியாவை விட்டு எப்போது போகும் என கேள்வி எழுப்பப்பட்டது.

அம்மன்
அதற்கு நித்தி, தன் உடலில் அம்மன் புகுந்துள்ளது. இந்தியாவில் காலடி எடுத்து வைத்தால்தான் கொரோனா இந்தியாவை விட்டு ஓடும் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ வெளியான நிலையில் நெட்டிசன்கள் "கம்பேக்" கொடுங்கள் என கலாய்த்து வருகிறார்கள்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications