2047ல் வல்லரசு ஆகுமா இந்தியா? இன்று பிரதமர் மோடி தலைமையில் கூடுகிறது நிதி ஆயோக் நிர்வாகக் குழு
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. 2047 ஆம் ஆண்டில் இந்தியாவை வல்லரசு நாடாக வளர்த்து எடுக்கும் வகையில் பொருளாதார வியூகங்களை வகுப்பது பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
இந்தியாவின் உயரிய கொள்கை வியூகங்களை வகுப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு நிதி ஆயோக். இந்த அமைப்பின் நிர்வாகக் குழுவிற்கு பிரதமா் நரேந்திர மோடி தலைவராக உள்ளார். அனைத்து மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநா்கள், மத்திய அமைச்சா்கள் இதன் நிர்வாகக் குழுவில் இடம் பெற்று இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று 8 வது நிதி ஆயோக் நிர்வாகக் குழுவின் கூட்டம் நடைபெற இருக்கிறது. வளா்ந்த பாரதம் 2047: இந்தியா்களின் பங்களிப்பு என்பதை மையக் கருவாக கொண்டு நடைபெறும் இந்த நிர்வாகக் குழு கூட்டத்தில், நாட்டின் உள்கட்டமைப்பு, சுகாதாரம், பெண்கள் முன்னேற்றம், திறன் மேம்பாடு உள்ளிட்ட குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
2047 ஆம் ஆண்டு இந்தியாவை வல்லரசு நாடாக வளர்த்து எடுக்கும் வகையில் இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட உள்ளது. தற்போது உலக அளவில் 5 வது மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. பல்வேறு துறைகளில் பிரபலமான நாடாகவும் இந்தியா சா்வதேச அளவில் திகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தியாவின் வளா்ச்சியை அடுத்த 25 ஆண்டுகளுக்கு வேகப்படுத்துவது குறித்தும், இதற்கான வழிமுறைகளைத் திட்டமிடுவது பற்றியும் விவாதிக்கப்பட உள்ளதாக நிதி ஆயோக் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல், நாட்டின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உத்வேகம் அளிப்பது குறித்து, உள்கட்டமைப்பு, முதலீட்டை அதிகரித்தல், சமூக மேம்பாடு, நாட்டின் சுகாதாரம், ஊட்டச்சத்து குறைபாடு நீக்கம், திறன் மேம்பாடு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளதாகவும் நிதி ஆயோக் விளக்கமளித்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications