நிதிஷ் குமாருக்கு பிரதமராக கூட சான்ஸ் இருக்கு.. இந்தியா கூட்டணி கட்சியிடம் இருந்து வந்த ரியாக்ஷன்
டெல்லி: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்தது நிதிஷ் குமார் தான் என்றும் இந்தியா கூட்டணியில் இருந்தால் யார் வேண்டும் என்றாலும் பிரதமராகலாம் எனவும் சமாஜ்வாட்சி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார்.
விரைவில் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணியை உருவாக்கின. இந்தக் கூட்டணியை உருவாக்கியதில் நிதிஷ் குமாருக்கு பெரும் பங்குண்டு. அந்த வகையில் இந்தியா கூட்டணி கட்சிகளின் முதல் கூட்டம் கூட பாட்னாவில் தான் நடைபெற்றது. அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டம் என இந்தியா கூட்டணி கட்சிகள் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தன.

ஆனால் தொகுதி பங்கீடு என வரும் போது இந்தியா கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகளுக்குள் முரண்பாடு ஏற்பட தொடங்கியது. அந்த வகையில், மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி முதலில் போர்க்கொடி தூக்கினார். மேற்கு வங்காளத்தில் தனித்து போட்டியிடுவதாக அதிரடியாக அறிவித்தார். அடுத்த நாளே அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் பஞ்சாபில் தனித்து போட்டியிடும் என அறிவித்தது.
இப்படி இந்தியா கூட்டணிக்குள் பூகம்பம் ஏற்பட்ட நிலையில், நிதிஷ் குமார் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைக்க இருப்பதாக தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்காவிட்டலும் கூட அவரது நடவடிக்கைகள் தற்போது பரவி வரும் செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
அதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை நிதிஷ் குமார் மீண்டும் பாஜக ஆதரவுடன் முதல்வராக பதவியேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்த நிதிஷ் குமார் பாஜகவுடன் கூட்டணி அமைக்க இருப்பது இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிற கட்சி தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், நிதிஷ் குமார் குறித்து கூறியிருப்பதாவது:- இந்தியா கூட்டணியை நிதிஷ் குமார் வலுப்படுத்துவார். தேசிய ஜனநாயக கூட்டணியுடன் நிதிஷ் குமார் செல்வார் என்ற நம்பிக்கை இல்லை. இந்தியா கூட்டணியுடன் நிதிஷ் குமார் இருந்தால் அவருக்கு பிரதமராகவும் வாய்ப்பு உள்ளது” என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications