பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க நிதிஷ்குமார் 3 முக்கிய நிபந்தனைகள்- வேளாண் துறைக்காக ஜேடியூ-ஜேடிஸ் மோதல்!
டெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க 4 கேபினட் அமைச்சர் பதவி உள்ளிட்ட 3 முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாம் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ)
லோக்சபா தேர்தலில் பாஜக தனித்து 240 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவை 272 இடங்கள். இதனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க இருக்கின்றன.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் 16, நிதிஷ்குமாரின் ஜேடியூ 12 இடங்களை கையில் வைத்துள்ளன. இவைதான் அந்த கூட்டணியின் பிரதான பெரிய கூட்டணி கட்சிகள். இந்த இரு கட்சிகளின் தயவு இல்லாமல் பாஜகவால் மத்தியில் ஆட்சியை இம்மி அளவு கூட நகர்த்திவிட முடியாது என்பதுதான் களம்.
இதனால் சந்திரபாபு நாயுடுவும் நிதிஷ்குமாரும் கிங் மேக்கர்களாகி இருக்கின்றனர். அத்துடன் தங்களுக்கான 'பேரங்களை'யும் வலுவாக பேசத் தொடங்கி இருக்கின்றனர். தெலுங்குதேசம் கட்சியைப் பொறுத்தவரையில் சபாநாயகர் பதவியை எதிர்பார்க்கிறது. கர்நாடகாவின் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சியோ, வேளாண் அமைச்சர் பதவியை எதிர்பார்க்கிறதாம்.
நிதிஷ்குமாரின் ஜேடியூ மொத்தம் 4 கேபினட் அமைச்சர் பதவிகளை கேட்கிறதாம். இதில் வேளாண் துறை இலாகா கட்டாயம் வேண்டும் என்கிறதாம். அத்துடன் பீகாரில் முன்கூட்டியே சட்டசபைத் தேர்தலை நடத்த வேண்டும்; பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பதும் நிதிஷ்குமாரின் நிபந்தனைகளாம்.
ஆனால் பீகாரில் முன்கூட்டியே சட்டசபை தேர்தலை நடத்தவே கூடாது என்பது பீகார் பாஜக தலைவர்கள் கோரிக்கையாம். ஜேடியூ, லோக்சபா தேர்தலில் பெற்ற வெற்றியை வைத்து தம்மை வலுப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது. இதற்கு டெல்லி மேலிடம் ஒரு போதும் இடம் கொடுத்துவிடக் கூடாது என்பது பீகார் பாஜக தலைவர்களின் எதிர்ப்பாம்.
இந்த 3 முக்கிய நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி சுமூகமாக நடக்கும் என மிரட்டலுடன் கூறியிருக்கிறதாம் ஜேடியூ. அணி தாவுவதில் வல்லமை கொண்டது ஜேடியூ. எந்த நேரத்திலும் எந்த கூட்டணிக்கும் தாவக் கூடியது ஜேடியூ என்பதால் பாஜக மேலிடம் தீவிரமான ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறதாம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications