இனி பிசிக்ஸ் தான்.. நீட் தேர்வு ரேங்கிங்கில் முக்கியமான திருத்தத்தை மேற்கொண்ட தேசிய மருத்துவ ஆணையம்!
டெல்லி: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ரேங்கிங்கில் இனி இயற்பியல் பாடத்துக்கு முன்னுரிமை தரும் வகையில் முக்கிய திருத்தத்தை மேற்கொண்டுள்ளது தேசிய மருத்துவ ஆணையம்.
நீட் தேர்வில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரே மதிப்பெண் எடுக்கும் பட்சத்தில், இயற்பியல் பாடத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விதிமுறையில் திருத்தம் செய்ய தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்துள்ளது.

இளநிலை மருத்துவக் கல்வி சேர்க்கை விதிமுறைகள் 2023 கடந்த 2ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், எம்பிபிஎஸ் கவுன்சிலிங்கில் முக்கிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் இருக்கும் வழிகாட்டுதல்களின்படி, 2 அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வில் ஒரே மாதிரியான மதிப்பெண் அல்லது சதவீதம் எடுத்திருந்தால், அவர்கள் உயிரியல் பாடப்பிரிவில் எடுத்த மதிப்பெண் ஒப்பிட்டு பார்க்கப்படும்.
அதுவும் ஒரே மாதிரியாக இருந்தால், வேதியியல், அதைத் தொடர்ந்து இயற்பியல் மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும். கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் மதிப்பெண்களும் ஒரே மாதிரியாக இருந்தால், மூத்த வயதுடையவருக்கு தரவரிசையில் முன்னுரிமை தரப்படும்.
இனி இந்த நடைமுறை மாற்றப்பட்டு, இயற்பியல் பாட மதிப்பெண்ணுக்கு முன்னுரிமை தர தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்துள்ளது. இயற்பியல், வேதியியல், கடைசியாக உயிரியல் என்ற வரிசையில் மதிப்பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு தரவரிசை நிர்ணயிக்கப்பட உள்ளது.
இதிலும் தீர்வு காணப்படவில்லை எனில், கணினி மூலம் குலுக்கல் நடத்தப்பட்டு தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். இந்த புதிய விதிமுறைகள் அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய விதிமுறைகளின்படி, எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்கள் சேர்க்கை தேதியிலிருந்து 9 ஆண்டுகளுக்குள் படிப்பை முடிக்க வேண்டும். அதே நேரத்தில் முதலாம் ஆண்டில் தேர்ச்சி பெற 4 வாய்ப்புகள் மட்டுமே வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
எந்தச் சூழலிலும் முதலாம் ஆண்டு படிப்பை முடிக்க 4 முறைக்கு மேல் வாய்ப்புகள் வழங்கப்படாது என தேசிய மருத்துவ ஆணைய விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. மேலும், மெரிட் பட்டியலின் அடிப்படையிலேயே நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கைக்கு பொது கவுன்சிலிங் நடக்கும் என்றும் தேசிய மருத்துவ ஆணையம் கூறி உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications