"ரத்த உறைதல்.." கொரோனா வேக்சின் பாதுகாப்பானதா? பக்க விளைவு ஏற்படுமா! மருத்துவர்கள் புதிய விளக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கோவிஷீல்டு எடுத்துக் கொண்ட வெகு சிலருக்கு அரிதாக ரத்த உறைதல் பிரச்சினை ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக நிதி ஆயோக் உறுப்பினர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் நம்மை ஒரு வழி செய்துவிட்டது. அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை எந்தவொரு நாடும் இந்த கொரோனா பாதிப்பில் தப்ப முடியவில்லை.

No adverse effects reported from Corona vaccines in India says NITI Aayog member

அப்போது பலர் உயிரிழந்து வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி தான் பெரியளவில் நமக்கு உதவியது. இதனால் உயிரிழப்புகள் குறைந்தது மட்டுமின்றி நாம் விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்பினோம்.

கொரோனா தடுப்பூசி: இந்தச் சூழலில் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தங்கள் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட வெகு சிலருக்கு ரத்த உறைதல் பிரச்சினை ஏற்படலாம் என்று அந்த நிறுவனமே பிரிட்டன் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது. இது பெரும் சர்ச்சை கிளப்பிய நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு சார்பில் முக்கியமான விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டது.

கொரோனா தடுப்பூசி அரிய பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.. பிரிட்டன் நிறுவனம் விளக்கம்! என்ன நடந்தது


கொரோனா வேக்சின் சர்ச்சை தொடர்பாக நிதி ஆயோக் உறுப்பினரும் மூத்த ஆய்வாளருமான விகே சரஸ்வத் சில முக்கிய கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அதாவது இந்தியாவில் பல கோடி பேருக்கு கொரோனா வேக்சின் போடப்பட்ட நிலையில், கொரோனா தடுப்பூசிகள் தொடர்பாக இந்தியாவில் எந்தவித மோசமான பக்க விளைவுகளும் பதிவாகவில்லை என்று சரஸ்வத் தெரிவித்தார்.

பிரச்சினை இல்லை: செய்தியாளர் சந்திப்பில் பேசிய டாக்டர் சரஸ்வத் கூறுகையில், "கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் இரண்டும் தெளிவாகச் சான்றளிக்கப்பட்டுள்ளன.. மேலும் இந்தியாவில் இதுபோன்ற பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை.. வேக்சின் எடுத்துக் கொண்ட இந்திய மக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை" என்றார்.

தங்கள் தடுப்பூசியால் சிலருக்கு அரிதான ரத்த உறைதல் பிரச்சினை ஏற்படும் என்று அஸ்ட்ராஜெனெகா கூறியுள்ளது தொடர்பாகக் கேள்விக்கு சரஸ்வத், "இந்த விவகாரத்தில் என்னிடம் அந்த டேட்டாக்கள் இல்லை. எனவே, அஸ்ட்ராஜெனெகா கூறியதில் என்னால் கருத்துச் சொல்ல முடியாது. தொடர்பான புதிய வளர்ச்சி குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை" என்றார்.

கொரோனா வேக்சின்: கொரோனா தடுப்பூசியால் சில மோசமான பாதிப்புகள் ஏற்படுவதாக ஏற்கனவே தகவல்கள் வந்துள்ளதாகத் தெரிவித்த அவர், இருப்பினும், செக் செய்து பார்த்தல் அவை போலி என்று நிரூபிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மொத்தத்தில் கொரோனா தடுப்பூசியால் இந்தியர்களுக்குப் பெரியளவில் பாதிப்பு இல்லை என்பதே அவரது கருத்தாகும்.

பின்னணி என்ன: அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியால் மோசமான பாதிப்புகள் ஏற்படுவதாகக் கூறி பிரிட்டன் நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்து இருந்தனர். 51 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் 100 மில்லியன் பவுண்டுகள் வரை நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர். அதில் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் சமர்ப்பித்த பதிலில் தான் கொரோனா தடுப்பூசியால் சில அரிய பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் ஒப்புக் கொண்டு இருக்கிறது.

அதேநேரம் வேக்சின் எடுத்துக் கொண்ட சில வாரங்கள், அதிகபட்சம் 8 வாரங்கள் வரை மட்டுமே பக்க விளைவுகள் ஏற்படும். இந்தியர்கள் வேக்சின் எடுத்துக் கொண்டு 2 ஆண்டுகள் ஆகிவிட்டதால் இனிமேல் எங்குப் பக்க விளைவுகள் ஏற்படுமோ என்று அஞ்சத் தேவையில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+