நெஞ்சை நிமிர்த்தி திரிய வேண்டாம்.. கவனமாக இருங்கள்.. பாஜகவினருக்கு மோடி கொடுத்த வார்னிங்!
நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு திரிய வேண்டாம், நாம் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்று பாஜகவின் முக்கிய உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கி உள்ளார்.
Recommended Video
டெல்லி: நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு திரிய வேண்டாம், நாம் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்று பாஜகவின் முக்கிய உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கி உள்ளார்.
காஷ்மீர் பிரச்சனை தற்போது உச்சகட்ட பரபரப்பில் சென்று கொண்டு இருக்கிறது. காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. அது மட்டுமில்லாமல் ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உள்ளது.
இது பாஜகவினர் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மத்தியில் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாஜக கட்சியினர் பலர் இதனால் பெரும் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

என்ன விஷயம்
இந்த நிலையில் இந்த விஷயம் குறித்து பாஜகவினர் பெரிதாக கொண்டாட கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்து இருக்கிறார். பாஜக அமைச்சர்கள் முன் பேசிய அவர், நாம் மிக சிறப்பான வரலாற்று விஷயம் ஒன்றை நிகழ்த்தி இருக்கிறோம். ஆனால் இதை சாதனையாக கருத கூடாது. நாம் இதை வரலாற்றில் செய்த திருப்பமாக கருத வேண்டும்.

என்ன சாதனை
நாம் இதை சாதனையாக கருதி கொண்டாட கூடாது. நெஞ்சை நிமிர்த்தி சுற்றிக்கொண்டு இருக்க கூடாது. இனிமேல்தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். நாம் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. அதில் கவனம் செலுத்த வேண்டும்.

கருத்து
இதை எதிர்ப்பவர்கள் கருத்துக்களை நாம் புறக்கணிக்க கூடாது. நாம் அனைவரும் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும். நாட்டில் சில மக்கள் இந்த விஷயத்தை எதிர்க்கிறார்கள். அவர்கள் ஏன் எப்படி செய்கிறார்கள் என்று நாம் பார்க்க வேண்டும்.

முக்கியம்
நம்முடைய பாதுகாப்புதான் இப்போது முக்கியம். கொண்டாட்டங்களில் ஈடுபடுவது முக்கியம் இல்லை. நாம் மாற்ற வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கிறது. அதற்குள் நாம் எல்லாம் சாதித்துவிட்ட திருப்தியில் இருக்க கூடாது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். பாஜகவினர் இடையே மோடியின் இந்த கோரிக்கை வைரலாகி உள்ளது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications