லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக.. எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
டெல்லி: லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக 'இந்தியா கூட்டணி' கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் லோக்சபா எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு சபாநாயகர் ஓம் பிர்லாஅனுமதி வழங்கவில்லை என குற்றம் சாட்டிய எதிர்க்கட்சிகள், சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதையடுத்து கடந்த திங்கள் கிழமை முதல் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று வந்தது. இன்றும் இந்த வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பு, அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைப் பற்றி பேசிய கருத்துகளே இந்த கடும் எதிர்ப்புகளுக்கும் கூச்சல் குழப்பங்களுக்கும் வழிவகுத்தன.

அமித் ஷா பேசும் போது, எதிர்க்கட்சிகள் நடத்தை பற்றி பேசுகிறார்கள். அவர்களின் தலைவரே கண்ணடித்து, பிரதமரை கட்டித்தழுவி, பறக்கும் முத்தம் கொடுக்கும்போது, அவர் சீண்டுகிறார் என்பதையே காட்டுகிறது" என்று குறிப்பிட்டார். அமித்ஷா இவ்வாறு பேசியதும் கோபம் அடைந்த எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற மரபுக்கு முரணான வார்த்தைகளை அமைச்சர் பயன்படுத்துவதாகக் கூறி தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சிகளின் கோஷங்கள் மற்றும் அமளிக்கு மத்தியிலேயே குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், நம்பிக்கையில்ல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. எதிர்க்கட்சிகளுக்கு வெறும் 238 எம்.பி.க்களின் ஆதரவே இருப்பதால், தோல்வியில் முடியும் என முன்பே எதிர்பார்க்கப்பட்டது.
238 எம்.பி.க்களில், காங்கிரஸுக்கு 99 பேரும், சமாஜ்வாடி கட்சி, திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளுக்கு மீதமுள்ள இடங்களும் உள்ளன. அதேசமயம், ஆளும் தரப்பிற்கு 293 எம்.பி.க்களின் ஆதரவு இருந்தது. இதில் பாரதிய ஜனதா கட்சிக்கு 240, ஐக்கிய ஜனதா தளத்திற்கு 16, தெலுங்கு தேசம் கட்சிக்கு 12 மற்றும் பிற தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் அடங்கும்.
முன்னதாக, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் லோக்சபா எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு சபாநாயகர் ஓம் பிர்லாஅனுமதி வழங்கவில்லை என குற்றம் சாட்டிய எதிர்க்கட்சிகள், சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications