மோடியின் மவுனத்தை கலைக்கவே நம்பிக்கையில்லா தீர்மானம்.. டிஎம்சி எம்.பி. மஹூவா மொய்த்ரா ஆவேசம்
டெல்லி: பிரதமர் நாடாளுமன்றத்துக்கு வர மறுக்கிறார் அல்லது மணிப்பூருக்கு செல்ல மறுக்கிறார் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா தெரிவித்தார். மணிப்பூர் மீதான இந்த மவுன நெறிய உடைப்பதற்காகவே இந்த தீர்மானம். பெரும்பாலான நம்பிக்கையில்லா தீர்மானங்கள் அன்றைய அரசாங்கத்தை வீழ்த்துவற்கான எதிர்மறை தீர்மானங்களாகும் என்றும் மஹூவா மொய்த்ரா கூறியுள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக வன்முறை நீடிக்கிறது. மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக அழைத்து வரப்பட்டு கூட்டு வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மணிப்பூர் கலவரத்திற்கு பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின.

இவ்விவகாரத்தில் உள்துறை அமைச்சர் பதிலளிப்பார் என்று ஆளும் தரப்பு கூறிய நிலையில் எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மனத்தை தாக்கல் செய்ய முடிவெடுத்தனர். நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்த பின், தீர்மானத்தின் மீதான விவாதம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெறும் என லோக்சபாவில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 8ஆம் தேதி முதல் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் லோக்சபாவில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற விவாதத்திற்குப் பிறகு மூன்றாவது நாள் விவாதம் நடைபெற்றது.
நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா பேசினார். அப்போது அவர், பிரதமர் மோடி நாங்கள் சொல்வதை கேட்க மாட்டார், கடைசி நாளில் வந்து பேசுவார். இதைவிட துரதிர்ஷ்டவசமானது என்னவென்று எனக்கு தெரியவில்லை, நமது பிரதமர் நாடாளுமன்றத்துக்கு வர மறுக்கிறார் அல்லது மணிப்பூருக்கு செல்ல மறுக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.

இந்த அவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களாகிய எங்களிடம் அமைதியாக இருங்கள் என்று சொல்லப்படுவது வழக்கம். மணிப்பூர் மீதான இந்த மவுன நெறிய உடைப்பதற்காகவே இந்த தீர்மானம். பெரும்பாலான நம்பிக்கையில்லா தீர்மானங்கள் அன்றைய அரசாங்கத்தை வீழ்த்துவற்கான எதிர்மறை தீர்மானங்களாகும். இங்கே இது சாத்தியமில்லை என்பது எங்களுக்கு தெரியும்.
எங்களிடம் எண்கள் இல்லை. கருவூல பெஞ்சில் உள்ள எனது நண்பர்கள் மற்றும் ஓய்.எஸ்.ஆர். போன்ற பிற பா.ஜ.க. கூட்டாளிகள் இந்த தீர்மானம் தோல்வியடையும் என்று எங்களை கேலி செய்தனர். எதையும் கவிழ்ப்பதற்காக அல்ல, எதையாவது உயிர்த்தெழுப்ப வேண்டும் என்ற இயக்கத்தை முன்வைத்த முதல் கூட்டமைப்பு I.N.D.I.A.வாக இருக்கலாம். மணிப்பூர் ஒரு வெறுப்பு குற்றம், உள்நாட்டு போர் என்றும் மஹூவா மொய்த்ரா கடுமையான கருத்துக்களை முன் வைத்தார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications