Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடியை முதல் தடவை பார்த்தேன்.. பராசக்தி படத்தில் சர்ச்சையா? ஓபனாக பேசிய சிவகார்த்திகேயன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பராசக்தி பட விவகாரத்தில் எந்த சர்ச்சையும் இல்லை. மக்கள் புரிந்துகொண்டு சரியான பாதையில் எடுத்துக்கொள்கிறார்கள். விஜய்யின் அரசியல் பயணத்திற்கு நான் தனிப்பட்ட முறையிலும், சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்து தெரிவித்தேன். ஜனநாயகன்படம் விரைவில் வெளியாகும் என்று டெல்லியில் மத்திய இணை அமைச்சர் இல்லத்தில் நடந்த பொங்கல் விழாவில் சிவகார்த்திகேயன் பேசினார்.

டெல்லியில் மத்திய அமைச்சர் எல் முருகன் இல்லத்தில் பொங்கல் பண்டிகை விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிவகார்த்திகேயனின் பராசக்தி படக்குழு டீமும் கலந்துகொண்டது. இதில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

No controversy in Parasakthi film actor Sivakarthikeyan expressing excitement about meeting Modi

மோடியை முதல் முறை பார்க்கிறேன்

அனைவருக்கும் வணக்கம், அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். முதல் முறையாக பொங்கலை டெல்லியில் கொண்டாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எங்களுக்கு அழைப்பு வந்தது. இந்த நிகழ்ச்சி எப்படி கொண்டாடப்படுகிறது என்பதை நீங்களும் வந்து பார்க்க வேண்டும் என்று அழைத்து இருந்தார்கள்.

ஜிவி பிரகாசின் நிகழ்ச்சியும் சிறப்பாக இருந்தது. நம்ம கலாசாரத்தை இங்கே வந்து கொண்டாடுவது சிறப்பாக இருந்தது. முதல் முறையாக பிரதமர் மோடியை சந்தித்தேன். இதுவும் ஒரு மறக்க முடியாத தருணமாக இருந்தது. எல்லாருக்கும் பொங்கல் வாழ்த்துகள். பொங்கல் எல்லாருக்கும் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் கொடுக்க வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.

ஜனநாயகன் படம் வெளியாகும்

நமக்குள் நேர்மறை எண்ணங்கள் பரவட்டும். பராசக்தி பட விவகாரத்தில் எந்த சர்ச்சையும் இல்லை. மக்கள் புரிந்துகொண்டு சரியான பாதையில் எடுத்துக்கொள்கிறார்கள், நாங்கள் என்ன நோக்கத்துடன் கூறினோமோ அது மக்களைச் சென்றடைகிறது. காங்கிரஸ் கட்சியினரும் படத்தை முழுமையாகப் பார்த்தால், புரிந்துகொள்வார்கள்.

No controversy in Parasakthi film actor Sivakarthikeyan expressing excitement about meeting Modi

எனக்கு எந்தப் பிரச்சார நோக்கமும் இல்லை. விஜய்யின் அரசியல் பயணத்திற்கு நான் தனிப்பட்ட முறையிலும், சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்து தெரிவித்தேன். ஜனநாயகன் படம் விரைவில் வெளியாகும்" இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லியில் பொங்கல் விழா

டெல்லியில் மத்திய அமைச்சர் எல் முருகன் இல்லத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை பொங்கல் பண்டிகை உலகமெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட உள்ள நிலையில், டெல்லியில் எல். முருகன் இல்லத்திலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

அதேபோல தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, சரத்குமார் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர். ஆச்சர்யம் அளிக்கும் வகையில், பராசக்தி படக்குழுவினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்ட நடிகர்களும் ஜிவி பிரகாஷ் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

காங்கிரசுக்கு எதிரான படமா?

ஜிவி பிரகாஷின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதை பிரதமர் மோடி கேட்டு ரசித்தார். பொங்கல் விழாவுக்கு இடையே சிவகார்த்திகேயன், ரவிமோகனுடன் பிரதமர் மோடி உரையாடினார். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. பராசக்தி திரைப்படம் இந்தி திணிப்பு எதிர்ப்பை மையாக கொண்டு உருவான படமாக இருப்பதால் அரசியல் ரீதியாகவும் இந்த படம் முக்கியத்துவம் பெற்று இருந்தது.

பராசக்தி படத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குறித்து விமர்சனம் இருப்பதாகக் கூறி, காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வந்த நிலையில், காங்கிரஸின் இந்த எதிர்ப்பால், படத்தின் நோக்கம் அப்படியே திசைமாறிவிட்டது. மத்திய அரசை எதிர்க்க நினைத்த படம், இப்போது காங்கிரஸுக்கே எதிரான படமாகப் பார்க்கப்படத் தொடங்கிவிட்டது.

தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சிலரும் பராசக்தியை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இத்தகைய சூழலில்தான், பராசக்தி படக்குழுவினர் டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றது அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது. விஜய்யின் ஜனநாயகன் படம் சென்சார் பிரச்சினையில் சிக்கி தவித்து வரக்கூடிய சூழலில், இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களிலும் அரசியல் ரீதியான கருத்து யுத்தத்திற்கு வித்திட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+