பெரிய மிஸ்டேக்.. அண்ணாமலை “மெடிக்கல் சர்டிபிகேட்”.. மருத்துவர் பேர்கூட இல்லையே - வெடித்த சந்தேகம்
டெல்லி: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு உடல்நலக் குறைவு காரணமாக 2 வாரங்கள் மருத்துவர்கள் ஓய்வெடுக்க சொல்லி இருப்பதாக மருத்துவ சான்றிதழ் பகிரப்பட்டு வரும் நிலையில் அது குறித்து பலர் சமூக வலைதளங்களில் சந்தேகம் கிளப்பி வருகின்றனர்.
முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததால் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவர் மீது கோபமடைந்த அதிமுக பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக அறிவித்தது. அண்ணாமலை தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டால், மீண்டும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்க வரலாம் என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இது தொடர்பாக நிர்மலா சீதாராமன், பி.எல்.சந்தோஷ் ஆகியோரை அண்ணாமலை சந்தித்தார். அதன் பின்னர் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை அவர் சந்தித்தார். யாத்திரைக்கு மத்தியில் டெல்லிக்கு திடீர் பயணமாக சென்ற அண்ணாமலை, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை திங்கட்கிழமை சந்திக்க அனுமதி கேட்டார். ஆனால், அன்று அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இந்த நிலையில் புதன்கிழமை மதியம் அமித்ஷாவை அவர் சந்தித்து பேசினார். அப்போது அதிமுக மற்றும் அதன் தலைவர்களை பற்றியும், அதிமுகவினரின் ஊழல் பட்டியல் குறித்து வாய் திறக்கக்கூடாது என்ற அமித்ஷா அறிவுறுத்தியதாக செய்திகள் வெளியாகின.
இந்த சந்திப்பை அடுத்து அண்ணாமலை டெல்லியில் இருந்து புதன் கிழமை இரவே சென்னைக்கு திரும்பினார். செய்தியாளர்கள் விமான நிலையத்தில் பேட்டி எடுக்க வந்தபோது 2 நாட்கள் கழித்து பேசுகிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். அதன் பின்னர் யாத்திரையில் பங்கேற்பார், கட்சி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வார் என்றெல்லாம் தகவல் வெளியானது. இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக ட்விட்டர் பக்கத்தில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையின் பெயரில் அண்ணாமலையின் மருத்துவ சான்றிதழ் பதிவிடப்பட்டது.
அந்த பதிவில், "நமது மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்களின் என் மண் என் மக்கள் நடைபயணம் அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில், தற்போது மாநில தலைவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அக்டோபர் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. நாளை திட்டமிட்டபடி மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். திருத்தப்பட்ட நடைபயண பட்டியல் விரைவில் வெளியிடப்படும்." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று அண்ணாமலை இல்லாமலேயே பாஜக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் பிரபல அரசியல் விமர்சகரும் மருத்துவருமான சுமந்த் ஸ்ரீ ராமன் அண்ணாமலையின் மருத்துவ சான்றிதழ் குறித்து சந்தேகம் கிளப்பி உள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், "அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். ஆனால், ஒரு மருத்துவராக குறைந்த சுவாசக் குழாய் தொற்றுக்கு 2 வாரம் படுக்கை ஓய்வு என்பதை இதுவரை நான் கேள்விப்பட்டது இல்லை. யாத்திரையை ஒத்திவைப்பதற்காகவே இந்த மருத்துவ சான்றிதழ். எந்த மருத்துவரும் இந்தச் சான்றிதழில் தன் பெயரை தெரிவிக்க விரும்பவில்லை என்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், மருத்துவத் துறை ஒரு கேலிக்கூத்தாக மாறி வருவது வருத்தம் தருகிறது." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications