கத்தாருக்கு எந்த விமானமும் இல்லை.. தோஹாவில் திருப்பி அனுப்பப்பட்ட விமானம்.. ஏர் இந்தியா அறிக்கை
டெல்லி: மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை காரணமாக கத்தார் வான் எல்லை தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது. இதனால் இந்தியாவின் கண்ணூரில் இருந்து கத்தார் சென்ற ஏர் இந்தியா விமானம் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. முன்னதாக கொச்சியில் இருந்து தோஹா சென்ற விமானம் மஸ்கட்டுககு திருப்பிவிடப்பட்டிருந்தது. இதுபற்றி விளக்கம் அளித்திருக்கும் ஏர் இந்தியா, தோஹாவில் எந்த ஏர் இந்தியா விமானமும் இல்லை என்றும் டிக்கெட்டை ரத்து செய்ய விரும்புவோர் அணுகலாம் என்று அறிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கு ஆதரவாக போரில் குதித்த அமெரிக்கா, கடந்த 22ம் தேதி அதிகாலையில் ஈரான் மீது அமெரிக்கா நேரடியாக தாக்குதல் நடத்தியது. ஈரான் நாட்டின் போர்டோ, நட்டான்ஸ், இஸ்பகான் ஆகிய 3 இடங்களில் உள்ள அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்காவின் பி-2 குண்டுவீச்சு விமானங்கள், 13,500 கிலோ எடை கொண்ட 'பங்கர் பஸ்டர்' குண்டுகளை வீசின. இதில் அணு உலைகள் கடுமையாக சேதமடைந்தன.

இதற்கு பதிலடி நிச்சயம் கொடுப்போம் என்று ஈரான் அறிவித்திருந்தது. அதன்படியே மத்திய வளைகுடாவில் உள்ள முக்கியமான நாடான கத்தாரின் தோஹாவில் உள்ள அமெரிக்க விமான படையின் தளமான அல்-உதெய்த் தளத்தை குறிவைத்து ஈரான் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. கத்தார் தலைநகர் தோஹாவிற்கு வெளியே பாலைவனத்தில் 24 ஹெக்டேர் பரப்பளவில் அல்-உதெய்த் தள விமான தளம் அமைந்துள்ளது. இது அமெரிக்காவின் மத்திய கட்டளை மையமாகச் செயல்பட்டு வருகிறது.
மத்திய கிழக்கு பிராந்தியத்திலேயே அமெரிக்காவின் மிகப் பெரிய தளமாக இது இருந்து வருகிறது. இங்கு சுமார் 10,000 அமெரிக்க வீரர்கள் பணியாற்று வருகிறார்கள். இங்கு ஏவப்பட்ட ஏவுகணைகளின் எண்ணிக்கை, ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலில் அமெரிக்கா பயன்படுத்திய குண்டுகளின் எண்ணிக்கைக்குச் சமம் ஆகும். இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரான், இந்த நடவடிக்கை நமது நட்பு மற்றும் சகோதர நாடான கத்தார் மற்றும் அதன் மக்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்று கூறியுள்ளது.
இதனிடையே தோஹாவில் புகுந்து ஈரான் தாக்குதல் நடத்தியதால் தற்காலிகமாக வான் எல்லையை கத்தார் முடியுள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து சென்ற விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டதுடன் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இது பற்றி ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை மற்றும் கத்தார் வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டதன் காரணமாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், கொச்சியில் இருந்து தோஹா செல்லும் எங்கள் விமானத்தை மஸ்கட்டுக்கு திருப்பிவிட்டிருக்கிறார்கள்.
கண்ணூரில் இருந்து செல்லும் எங்கள் விமானம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கத்தாருக்கு வேறு எந்த விமானங்களும் எங்களிடம் இல்லை. கத்தாரில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் எதுவும் இல்லை. நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மேலும் விமான பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்போம்.
சம்பந்தப்பட்ட நாட்டின் அதிகாரிகளின் அறிவுறுத்தல் காரணமாகவும், எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகள் காரணமாகவும் ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். பயணிகள் தங்ககள் பயண விவரங்களை தற்போதைய நிலைக்கு ஏற்ப அப்டேட செய்து கொள்ளலாம் அலலது வேண்டாம் என்றால் ரத்துசெய்து பணத்தைத் திரும்பப்பெறலாம். http://airindiaexpress.com தளத்தில் முழு விவரங்களை பாருங்கள்" என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
-
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications