பெட்ரோல், டீசல் வாகனங்களின் கதை முடிய போகுது.. நிதின் கட்காரி சொன்ன மேஜர் விஷயம்
டெல்லி: பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிர்காலம் இல்லை என்றும் வாகன உற்பத்தி நிறுவனங்கள், பயோ எரிபொருள், சிஎன்.ஜி, எல்.என்.ஜி போன்ற மாற்று எரிபொருளில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். அளவுக்கதிகமான பயன்பாடு காரணமாக, எதிர்காலத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி நெருக்கடியை சந்திக்கும் என்று கருதப்படும் நிலையில், நிதின் கட்காரி எதிர்கால திட்டங்கள் குறித்து பேசியுள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற புதைபடிவ எரிபொருட்களைக் கொண்டு இயங்கும் வாகனங்களுக்கு, நீண்டகால அடிப்படையில் எதிர்காலம் இல்லை என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதின் கட்காரி இது தொடர்பாக பேசியதாவது:-

எதிர்காலத்தின் எரிபொருள்
பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிர்காலம் இல்லை. எனவே வாகன உற்பத்தி நிறுவனங்கள், பயோ எரிபொருள், சிஎன்ஜி, எல்.என்.ஜி மற்றும் எலக்ட்ரிக் பவர்டிரெயின்ஸ் போன்ற மாற்று எரிபொருளில் கவனம் செலுத்த வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை இறக்குமதி விவகாரத்திலும் சுற்றுச்சூழலில் தாக்கம் ஏற்படுத்துவதிலும் தீவிர பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.
ஹைட்ரஜன் எரிபொருள் திட்டத்தை சோதனை அடிப்படையில் அரசு தொடங்கியுள்ளது. டாடா மோட்டார்ஸ், வால்வோ, அசோக் லைலாண்ட் மற்றும் மகிந்திரா & மகிந்திரா ஆகிய நிறுவனங்கள் ஹைட்ரஜன் எரிபொருள் சோதனையை தொடங்கிவிட்டன. தற்போது 10 வழித்தடங்களில் ஹைட்ரஜன் லாரிகள் மற்றும் பேருந்துகளை இயக்கி வருகிறோம். ஹைட்ரஜன்தான் எதிர்காலத்தின் எரிபொருள், மாற்று எரிபொருளாக எத்தனால் முக்கியத்துவம் வாய்ந்தது.
பல்வேறு மூலப்பொருட்களிலிருந்து எத்தனால் தயாரிக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. வாகனங்கள் E20 எரிபொருளில் இயங்கிக்கொண்டிருக்கும்போதே, ஃப்ளெக்ஸ்-ஃப்யூல் என்ஜின்கள் உருவாக்கும் பணியில் தொழில்துறை நிறுவனங்கள் ஏற்கனவே ஈடுபட்டு வருகின்றன" என்றார்.
தேவை அதிகரிக்கும்
மேலும் பொதுப்போக்குவரத்தில் பயணிகள் பாதுகாப்பு குறித்து பேசிய நிதின் கட்காரி, பாதுகாப்பு தரநிலைகளை மேம்படுத்துவது தொடர்பாக அரசு ஆலோசனை செய்து வருகிறது என்றார். இது தொடர்பாக நிதின் கட்காரி கூறுகையில், "பேருந்து பதிவு விவரங்கள் இனி வாகன் போர்டலில் நேரடி ஆய்வு மற்றும் வீடியோ ஒப்புதல்களுடன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
வெறுமனே செலவுகளை மட்டும் குறைப்பதில் கவனம் செலுத்தாமல் தரம் மற்றும் பாதுகாப்பு, சொகுசு ஆகியவற்றிற்கு பேருந்து பாடி உற்பத்தியாளர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். அடுத்த மூன்று ஆண்டுகளில் மின்சார பேருந்துகளுக்கான தேவை மட்டும் 1,50,000- ஆக உயரும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. மின்சார பேருந்துகளின் உற்பத்தி திறன் தற்போது ஆண்டுக்கு 70 ஆயிரமாக உள்ளது" என்றார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications