கொரோனா வேக்சின் ஏற்றுமதிக்கு "நோ" தடை.. தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்படும்.. இந்தியா அதிரடி முடிவு!
டெல்லி: இந்தியாவில் கொரோனா வேக்சின் ஏற்றுமதி தடை செய்யப்படவில்லை, தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரிட்டன், ஆஸ்திரேலியா தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளுக்கு இந்தியாதான் கொரோனா வேக்சின் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவில் சீரம் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸ்போர்ட் - ஆஸ்டர்செனகா நிறுவனத்தின் கோவிட்ஷீல்ட் நிறுவனத்தின் வேக்சின் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த செவ்வாயில் இருந்து இந்த வேக்சின் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுவிட்டது. இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகரிப்பதால் வேக்சின் ஏற்றுமதி தடை செய்யப்பட்டுவிட்டது என்று செய்திகள் வெளியானது. இது சில உலக நாடுகளுக்கு இடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் இந்தியாவில் கொரோனா வேக்சின் ஏற்றுமதி தடை செய்யப்படவில்லை. இதுவரை அப்படி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவிற்கு தேவைப்படும் வேக்சினை பொறுத்து ஏற்றுமதி முறைப்படுத்தப்படும். நேரத்திற்கு தகுந்தபடி வேக்சின் ஏற்றுமதி முறைப்படுத்தப்படும். இந்தியாவின் தேவைகளை கருத்தில் கொள்ள வேண்டும்.
அதே சமயம் நட்பு நாடுகளுக்கு தொடர்ந்து வேக்சின் ஏற்றுமதி செய்யப்படும். இதுவரை வேக்சின் ஏற்றுமதியில் எந்த தடையையும் இந்தியா விதிக்கவில்லை. இதுவரை 75க்கும் அதிகமான நாட்களுக்கு 60 மில்லியனுக்கும் அதிகமான டோஸ்களை ஏற்றுமதி செய்து உள்ளோம்.
ஏற்றுமதி இதே வேகத்தில் தொடர்ந்து நடக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications