தேசிய அளவில் சரிந்த ராகுல் காந்தி செல்வாக்கு.. தேடி வந்து அடித்த ஸ்டாலினின் அரசியல்! பெரிய அடி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய தேசிய அரசியலில் காங்கிரஸ் கட்சியின் முதன்மை முகமாக விளங்கும் ராகுல் காந்தியின் செல்வாக்கு நாளுக்கு நாள் மங்கி வருவதாகவும், தேசியத் தலைவராக அவர் மீது மக்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகள் வைத்திருந்த நம்பகத்தன்மை பெரும் சரிவைச் சந்தித்து வருவதாகவும் டெல்லி அரசியல் அரங்கில் தீவிரமான விவாதங்கள் எழுந்துள்ளன.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலேயே தேர்தல் பின்னடைவுகள் ஏற்பட்டு வரும் நிலையில், ராகுல் காந்தியின் அரசியல் நம்பகத்தன்மைக்கு ஏற்பட்டுள்ள இந்த விரிசலுக்குப் பின்னால் தமிழக அரசியல் மாற்றமே முதன்மைக் காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

rahul gandhi congress

பாஜக ஆதரவாளர்கள் உட்பட டெல்லி அரசியல் நோக்கர்கள் பலரும் சுட்டிக்காட்டும் ஒரு விஷயம்:.. தேசிய அளவில் ராகுல் காந்தியை ஒரு பிரதமர் வேட்பாளராகவும், அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுத் தலைவராகவும் முன்னிறுத்தியதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பங்கு மிக முக்கியமானது.

ஸ்டாலின் கட்டமைத்த ராகுலின் தேசிய பிம்பம்

காங்கிரஸ் கட்சிக்காரர்களே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக வெளிப்படையாக முன்மொழியத் தயங்கிய காலகட்டங்களில், 2019 மற்றும் 2024 ஆகிய இரண்டு அடுத்தடுத்த நாடாளுமன்றத் தேர்தல்களிலுமே மேடையில் முதல் ஆளாக நின்று, ராகுல் காந்தியே நாட்டின் அடுத்த பிரதமர் என முழங்கியவர் மு.க.ஸ்டாலின்.

தேசிய அளவில் பல்வேறு மாநிலத் தலைவர்களையும், மாநிலக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து ராகுல் காந்திக்கு ஆதரவான ஒரு பலமான கூட்டணிக் கட்டமைப்பை உருவாக்க ஸ்டாலின் தீவிரமாக உழைத்தார். இதன் காரணமாகவே, தேசிய அளவில் ராகுல் காந்தி ஒரு தவிர்க்க முடியாத எதிர்க்கட்சித் தலைவராக உருவெடுத்தார்.

திமுகவின் விசுவாசமும்... தேர்தல் சாதனைகளும்

காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில்கூட கணிசமான நாடாளுமன்ற இடங்களைப் பெற முடியாமல் தவித்த நேரங்களில், தமிழகத்தில் போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதை தனது தோளில் சுமந்து உறுதி செய்தது திமுக தலைமையிலான கூட்டணி. பலமுறை டெல்லி மேலிடத்திலிருந்து வந்த கவர்ச்சிகரமான அரசியல் வாய்ப்புகளையும், அழுத்தங்களையும் கூட நிராகரித்துவிட்டு, காங்கிரஸுடனான நீண்ட கால உறவை திமுக காப்பாற்றி வந்தது.

இத்தகைய தார்மீகப் பலமும், நீண்ட காலத்திற்கும் மேலான உண்மையான விசுவாசமும் இருந்தபோதிலும், ஆட்சி அதிகார மாற்றத்தைக் கண்டதும் திமுகவை ஒரே இரவில் கழற்றிவிட்டு, விஜய் தலைமையிலான தவெகவுடன் காங்கிரஸ் கைகோர்த்த விதம் தேசிய அளவில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நம்பகத்தன்மையை இழக்கும் காங்கிரஸ் தலைமை

அரசியலில் கூட்டணிகளை மாற்றுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், அதற்கு ஒரு நியாயமான காரணமும், குறைந்தபட்ச அரசியல் நாகரிகமும் இருக்க வேண்டும். ஆனால், பல ஆண்டுகள் உடன் நின்ற ஒரு மூத்த கூட்டணிக் கட்சிக்கு ஒரு வார்த்தைகூட தெரிவிக்காமல் கூட்டணியை முறித்துவிட்டு, புதிய கூட்டணிக் கூட்டாளிகளைத் திருப்திப்படுத்துவதற்காக திமுகவை மேடைக்கு மேடை காங்கிரஸ் தலைவர்கள் வசைபாடத் தொடங்கியது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

பெங்களூர், டெல்லி, மும்பை என பிற மாநில அரசியல் வட்டாரங்களிலும், நடுநிலை வாக்காளர்கள் மத்தியிலும் இந்த விவகாரம் காங்கிரஸின் மீதான நம்பிக்கையைக் கடுமையாகக் குறைத்துள்ளது. பாஜக ஆதரவாளர்கள்கூட, இத்தனை ஆண்டுகள் பக்கபலமாக இருந்த ஸ்டாலினுக்கு காங்கிரஸ் செய்த இந்த அரசியல் முதுகு குத்தலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றே வெளிப்படையாகக் கூறுகின்றனர்.

ஊடகங்கள் வெளிப்படுத்தும் கசப்பான உண்மை

நீண்ட நாட்களாக மறைக்கப்பட்டு வந்த இந்த எதார்த்தத்தை தற்போது தேசிய ஊடகங்களும் விவாதிக்கத் தொடங்கியுள்ளன. தவெக அமைச்சரவையில் இடம்பிடித்தாலும், தேசிய அளவில் ராகுல் காந்திக்கு விஜய் சவாலாக மாறியுள்ளதும், தெற்கில் காங்கிரஸின் பிடி தளர்ந்து வருவதும் ராகுல் காந்தியின் அரசியல் முடிவுகளில் உள்ள பலவீனத்தையே காட்டுகிறது.

காலம் என்பது ஒரு கடுமையான ஆசிரியர்.. அது மக்களின் உண்மையான முகங்களை உரிய நேரத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும் என்பார்கள். அதிகார ஆசைக்காகத் தனது உண்மையான நண்பர்களைக் கைவிட்ட காங்கிரஸின் இந்த அரசியல் நகர்வு, தேசிய அளவில் ராகுல் காந்தியின் நம்பகத்தன்மைக்கே மிகப்பெரிய அடியாக மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+