மாணவர் போராட்டம்.. நான் எங்கே மனுவை விசாரிக்க மாட்டேன்னு சொன்னேன்.. தலைமை நீதிபதி விளக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:மாணவர்கள் மீதான காவல்துறை நடவடிக்கைக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மறுத்துவிட்டதாக ஊடகங்களில் வெளியாக்கப்பட்ட செய்திகள் முற்றிலுமாகப் பொய்யானவை என்றும், அது மிகவும் பொறுப்பற்ற செய்தி சேகரிப்பு என்றும் இந்தியத் தலைமை நீதிபதி சூரிய காந்த் கடுமையாகக் சாடியுள்ளார்.

மாணவர்கள் போராட்டம் தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் எந்தவொரு முறையான ரிட் மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்றும், ஒரு வழக்கறிஞர் அனுப்பிய கடிதக் கோரிக்கை மட்டுமே நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

CJP Protest

தலைமை நீதிபதியின் விளக்கம்

இன்று வழக்கறிஞர் சோயப் ஆலம் வேறு ஒரு வழக்கு தொடர்பான பட்டியலிடுதல் குறித்து தலைமை நீதிபதி அமர்வில் முறையிட்டார். அப்போது அந்த வழக்கை விசாரிக்கும் முன், மாணவர் போராட்டம் பற்றி பேசிய தலைமை நீதிபதி.. கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களில் பரவி வரும் தவறான செய்திகள் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

தலைமை நீதிபதி சூரிய காந்த் கூறுகையில், கடந்த இரண்டு நாட்களாக, இந்த விவகாரத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகவும், அதை விசாரிக்கவோ அல்லது பட்டியலிடவோ தலைமை நீதிபதி மறுத்துவிட்டார் என்றும் முற்றிலுமாக ஒரு பொய்யான செய்தி ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது. ஊடகங்கள் தங்களின் பொறுப்பில் இருந்து முற்றிலும் விலகி, இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவது கவலையளிக்கிறது.

இன்று காலை 10 மணி வரை கூட இந்த விவகாரம் தொடர்பாக ஒரே ஒரு பக்க மனு கூட உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. வழக்கறிஞர் மிஸ்ரா என்பவர் அனுப்பிய ஒரு கடிதக் கோரிக்கை மட்டுமே எங்களிடம் இருந்தது. முறையான தாக்கல் நடைமுறைகள் ஏதுமின்றி, ஒரு சாதாரணக் கடிதத்தை எவ்வாறு உச்ச நீதிமன்றம் ரிட் மனுவாகக் கருதி விசாரிக்க முடியும்? ஆனால், மக்கள் உண்மை என்னவென்று ஆராயாமல் பொறுப்பற்ற முறையில் செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

ஜூலை 22 அன்று நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

கடந்த ஜூலை 22-ஆம் தேதி, வழக்கறிஞர் நரேந்திர மிஸ்ரா என்பவர் தலைமை நீதிபதிக்குத் தாம் எழுதிய கடிதக் கோரிக்கை குறித்து வாய்மொழியாக முறையிட்டார். மாணவர்கள் போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய தாக்குதல்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து அவசர விசாரணை நடத்த வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாக இருந்தது.

இருப்பினும், முறையான மனுத் தாக்கல் இல்லாத காரணத்தினால் அந்த முறையீட்டை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி சூரிய காந்த், நீதிமன்றத்தின் நேரத்தையும் வீணடிக்காதீர்கள், உங்களின் நேரத்தையும் வீணடிக்காதீர்கள், என்று கூறி வழக்கறிஞரைக் கடிந்துகொண்டார்.

அதற்குப் பதிலளித்த வழக்கறிஞர் நரேந்திர மிஸ்ரா, காவல்துறையினரின் அத்துமீறல்கள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், அதற்குப் பதிலளித்த தலைமை நீதிபதி, ..எங்களுக்கு வீடியோக்களைப் பார்ப்பதில் எந்த விருப்பமும் இல்லை; அதை அமர்ந்து பார்ப்பதற்கு எங்களுக்கு நேரமும் இல்லை.. என்று தெளிவாகத் தெரிவித்து அந்த முறையீட்டை நிராகரித்தார்.

உச்ச நீதிமன்ற விதிகளின்படி, ஒரு விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றால், அதற்குரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி முறையான மனுத் தாக்கல் செய்யப்பட வேண்டும். சாதாரணக் கடிதங்களையோ அல்லது மின்னஞ்சல்களையோ அனைத்து நேரங்களிலும் ரிட் மனுவாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை நீதிமன்ற தரப்புகள் கூறுகின்றன.

ஆனால் நீதிபதி இந்த வழக்கை விசாரிக்க மறுத்ததாக செய்திகள் வந்த நிலையில்தான் தலைமை நீதிபதியே அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+