விசுவாசிகளையே 6 மாதமாக பார்க்கவில்லை.. தனிக்கட்சி திட்டம் "இப்போது'' இல்லை.. அழகிரி தாறுமாறு பேட்டி!
டெல்லி: பாஜகவில் தான் இணைவதாக வெளியாகும் செய்திகள் பொய், தனிக்கட்சி தொடங்குவது குறித்து இப்போது திட்டம் எதுவும் இல்லை என்று மு.க அழகிரி வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
திமுகவின் முன்னாள் உறுப்பினர் அழகிரியின் அளித்த பேட்டி ஒன்று அந்த கட்சிக்குள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரையில் அழகிரி அளித்த பேட்டியில், 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் திமுகவின் நிலையை நீங்களே அறிந்து கொள்ளலாம். புதிய கட்சி தொடங்குவது, தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்த விஷயங்களை ஆதரவாளர்களை பேசிவிட்டு முடிவு செய்வேன், என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதற்காக வரும் 20ம் தேதி இதற்காக அழகிரி தனது ஆதரவாளர்களை சந்திக்க உள்ளார். இந்த நிலையில் அழகிரி தனிக்கட்சி தொடங்குகிறாரோ என்று கேள்விகள் எழுந்தது.

அழகிரி
அதோடு அழகிரி பாஜகவில் இணைய வாய்ப்பு உள்ளதா என்றும் கேள்விகள் எழுந்தது. இந்த நிலையில் பாஜகவில் இணைவதாக வெளியாகும் செய்திகள் பொய். தனிக்கட்சி தொடங்குவது குறித்து இப்போது திட்டம் எதுவும் இல்லை என்று அழகிரி வெளிப்படையாக அறிவித்துள்ளார். தொடர் வதந்திகளுக்கு அழகிரி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பேட்டி
இது தொடர்பாக மு.க அழகிரி சிஎன்என் - நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், நான் பாஜகவில் சேர போவதாக வெளியாகும் செய்திகள் பொய். அப்படி எந்த யோசனையும் இல்லை. சிலர் வதந்திகளை பரப்புகிறார்கள்.

வதந்தி
நான் கட்சி தொடங்குவதாகவும் வதந்திகளை பரப்புகிறார்கள். நான் கட்சி தொடங்கினால் உங்களிடம் தெரிவிப்பேன். நான் எனது ஆதரவாளர்களிடம் கடந்த 6 மாதமாக பேசவே இல்லை. தீபாவளிக்கு கூட பேசவில்லை. அதெக்கெல்லாம் இன்னும் நாட்கள் இருக்கிறது.

சூழ்நிலை
நான் கட்சி தொடங்க சூழ்நிலைகள் இருந்தாலும், இப்போதைக்கு அப்படி திட்டம் எதுவும் இல்லை, என்று மு.க அழகிரி குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இப்போது கட்சி தொடங்கும் எண்ணம் எதுவும் இல்லை என்பதை உறுதியாக அறிவித்துள்ளார்.

தயாநிதி அழகிரி
இது தொடர்பாக அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி சிஎன்என் - நியூஸ்18 தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், என் அப்பா பாஜகவில் சேருவதாக வரும் செய்திகள் பொய். என் அப்பா பாஜகவினருடன் பேசுவதாக வரும் செய்திகள் உண்மை இல்லை. எனக்கு தெரிந்து அப்படி எந்த மீட்டிங்கும் நடக்கவில்லை., என்று குறிப்பிட்டுள்ளார்.
-
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்ட ரகசிய அறிக்கை: சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் தலைமை - பின்னணி என்ன? -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டிருந்தால் இன்று நிலைமையே வேறு.. நாங்க ஏமாந்துட்டோம்! எவ வேலு












Click it and Unblock the Notifications