நீட் ரிசல்ட் 2019: டாப் 50 இடத்தில் தமிழக மாணவர் ஒருவருமே இல்லை
Recommended Video
டெல்லி: நீட் தேர்வில், தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் முதல் 50 இடங்களுக்குள் வர முடியவில்லை.
மருத்துவ கல்விக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இந்த தேர்வு முடிவில் தமிழகத்திற்கு சில நல்ல விஷயங்கள் மட்டுமல்ல, கவலைக்குரிய விஷயமும் இருப்பதை மறுக்க முடியாது.

இம்முறை, 48.57 சதவீதம் தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த முறை, 39.56 சதவீதம் மாணாக்கர்கள்தான் தேர்ச்சி பெற்றிருந்தனர். எனவே, தமிழக மாணவர்களில், 9.01 சதவீதம் பேர் கடந்த ஆண்டைவிட இம்முறை அதிக தேர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்திலிருந்து மொத்தம்,
1.23 லட்சம் பேர் தேர்வு எழுதியிருந்தனர். அதில் 59 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
அதேநேரம், முதல் 50 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த எந்த மாணவரும் இல்லை. ராஜஸ்தானை சேர்ந்த, நளின் கந்தேல்வால் மொத்தமுள்ள 720க்கு, 701 மதிப்பெண் பெற்று, இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த ஸ்ருதி, அகில இந்திய அளவில் 57வது இடம் பிடித்துள்ளார். இவர், 685 மதிப்பெண் பெற்றுள்ளார். தமிழக அளவில் ஸ்ருதிக்குதான் முதலிடம்.
நீட் தேர்வில் 5 மூன்றாம் பாலினத்தவர்கள் தேர்வு எழுதியிருந்த நிலையில், அதில் 3 பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாரானாலும் கூட, இன்னும் போதிய அளவுக்கான தேர்ச்சியையோ, மதிப்பெண்களையோ பெறுவதில் சறுக்கி வருகிறார்கள் என்பதைத்தான் இந்த புள்ளி விவரம் எடுத்துக் காட்டுகிறது.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
நீட், சிபிஎஸ்இ குளறுபடிகள்! நாங்கள் நடத்துவது அமைதி போராட்டம்தான்! கரப்பான் பூச்சி கட்சி விளக்கம்












Click it and Unblock the Notifications