சென்னையில் உச்சநீதிமன்ற கிளை கிடையாது.. மெட்ராஸ் உயர்நீதிமன்ற பெயர் மாற்ற பரிசீலனை - சட்ட அமைச்சர்
டெல்லி: சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க தேவையில்லை என்று உச்சநீதிமன்றமே கூறிவிட்டது. அதேவேளையில் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பெயரை மாற்றம் செய்வது பரிசீலனையில் உள்ளது என்று ராஜ்யசபாவில் அதிமுக எம்பி தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறினார்.
நாடாளுமன்றத்தில் இன்று ராஜ்யசபாவில் அதிமுக எம்பி தம்பிதுரை பேசினார். அப்போது அவர், ‛‛தென்மாநிலங்களில் இருந்து ஏராளமான கோரிக்கைகள் உள்ளன. உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்கள் மற்றும் அதிமுகவின் கோரிக்கையாக இருக்கிறது. நாங்கள் அதனை கோரிக்கையாக வைக்கிறோம். சென்னையில் உச்சநீதிமன்ற கிளையை அமைக்க பரிசீலனை செய்யப்படுமா?

அதேபோல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டசபையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார். மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்ற பெயர் மாற்றத்துக்கான தீர்மானம் தான் அது. இந்த 2 விஷயங்கள் பற்றி பதில் அளிக்க வேண்டும்'' என்று கோரினார்.
இதற்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுந்து பதிலளித்தார். அப்போது அவர், ‛‛உச்சநீதிமன்ற கிளையை அமைக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை வைத்தன. இது உச்சநீதிமன்றத்துக்கும் சென்றது. ஆனால் உச்சநீதிமன்றம் தற்போது புதிய கிளைகள் தேவையில்லை என்று கூறி அந்த மேட்டரை செட்டில் செய்து வைத்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பெயரை மாற்றம் செய்வது அமைச்சரவையின் பரிசீலனையில் உள்ளது''
இதன்மூலம் சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளை அமைக்கப்பட இ்ப்போதைக்கு வாய்ப்பில்லை என்பதை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உறுதியாக தெரிவித்துள்ளார். அதேவேளையில் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பெயரை மாற்றுவது பற்றி பரிசீலனைக்கு பிறகு முடிவெடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications