தெற்கு vs வடக்கு.. மூத்த தலைகளுக்கு இடையே கடும் போட்டி.. காங்கிரசின் வருங்கால தேசிய தலைவர் யார்?
காங்கிரஸ் கட்சியின் வருங்கால தலைவர் யார் என்பது தொடர்பாக மூத்த தலைவர்களுக்கு இடையே தீவிரமான போட்டி நிலவி வருகிறது.
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் வருங்கால தலைவர் யார் என்பது தொடர்பாக மூத்த தலைவர்களுக்கு இடையே தீவிரமான போட்டி நிலவி வருகிறது.
Recommended Video
காங்கிரஸ் கட்சி கடந்த 6 வருடமாக எதிர்பார்த்து காத்திருந்த அந்த நாள் நெருங்கி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்தை சேராத ஒருவர் தலைவராக தற்போது சூழ்நிலை கைகூடி வந்துள்ளது. அதுவும் சோனியா குடும்பத்தை சேர்ந்தவர்களே இந்த கோரிக்கையை வைக்க தொடங்கி உள்ளனர்.
ஆம், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பொறுப்பில் இருந்து சோனியா காந்தி விலகிவிட்டார் என்று உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகி வருகிறது. சில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இதை மறுத்து உள்ளனர்.

என்ன மறுப்பு
ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் இந்த செய்தியை மறுத்தாலும் கூட, தலைவர் பதவியை வகிக்க முடியாது என்று சோனியா உறுதியாக கூறிவிட்டார் என்று செய்திகள் வருகிறது. நாளை காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடக்கிறது. நான் பதவியை விட்டு விலக முடிவு செய்து இருக்கிறேன். வேறு யாராவது தலைவர் பதவி அல்லது இடைக்கால தலைவர் பதவியை வகிக்கலாம். என்னால் இனி தலைவர் பதவியில் நீடிக்க முடியாது என்று சோனியா காந்தி உறுதியாக மறுத்துவிட்டார் என்று கூறுகிறார்கள்.

அடுத்து என்ன
இந்த நிலையில் அடுத்த காங்கிரஸ் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த தலைவர் பதவிக்கு 5 பேர் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது என்கிறார்கள். முதல் நபர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். இவருக்கு, கட்சியில் மூத்த தலைவர்கள் இடையே ஒருமித்த ஆதரவு உள்ளது என்று கூறுகிறார்கள். வடஇந்திய தலைவர்கள் மட்டுமின்றி தென்னிந்திய காங்கிரஸ் தலைவர்களும் இவருக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள்.

இரண்டு பேர்
அதேபோல் இன்னொரு பக்கம் ஏகே ஆண்டனி மற்றும் அசோக் கெலாட் இருவரையும் தலைவராக தேர்வு செய்ய சிலர் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். இதில் அசோக் கெலாட் வடஇந்திய தலைவர்கள் இடையே அதிக ஆதரவு கொண்டவராக இருக்கிறார். அவர் ராஜஸ்தான் முதல்வராக இருந்தாலும், தேசிய தலைவராக வேண்டும் என்று ''சிலர்'' காங்கிரஸ் மேலிடத்திற்ரு தீவிர அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

ஆண்டனி எப்படி
முன்னாள் அமைச்சரும். எம்பியுமான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏ.கே ஆண்டனிக்கும் தலைவர் பதவிக்கான வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.அதேபோல் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், சசி தரூர் ஆகிய இருவருக்கும் தலைவராக பிரகாசமான வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள். இதில் ப. சிதம்பரத்திற்கு மட்டுமே சில கோஷ்டி எதிராக இருக்கிறத. இந்த தலைவர் போட்டியே வடக்கு vs தெற்கு என்று நடப்பதாகவும் கூறுகிறார்கள்.

வடக்கு vs தெற்கு
அதாவது வடமாநிலங்களில் வலிமையாக இருக்கும் கமல்நாத், மன்மோகன் சிங், அசோக் கெலாட், சச்சின் பைலட் ஒரு பக்கம் தென் மாநிலங்களில் வலிமையாக இருக்கும் ஏகே ஆண்டனி , ப. சிதம்பரம், டிகே சிவக்குமார், சசிதரூர் இன்னொருபுறம் என்று இரண்டு தரப்புக்கும் இடையே போட்டி நடக்கிறது என்று கூறுகிறார்கள். விரைவில் இந்த லிஸ்டில் இருந்து ஒருவர் காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
-
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
லம்பாக அமவுண்டை அமுக்கிய தலைகள்.. ராகுலுக்குப் போன மெசேஜ்! அடுத்தடுத்த ஆக்ஷனுக்கு தயாராகும் காங்.,! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications