"இந்தி கட்டாயமாக்கக் கூடாது!" ஒட்டுமொத்தமாக திரண்டு வரும் வடகிழக்கு மாநிலங்கள்! அடுத்து என்ன
டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் 10ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்குவது தொடர்பான அறிவிப்பிற்கு அங்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் நாடாளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 37வது கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, பொதுமக்கள் இந்தி மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்றும் மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தான் நடைபெறுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

அமைச்சர் அமித் ஷா
அமைச்சர் அமித் ஷா மேலும் பேசுகையில், "பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்று இந்தி மொழியை எளிமையாக மாற்றாத வரையில் அது பரப்பப்படாது. அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழி என்பது உள்ளூர் மொழிகளுக்கு மாற்று அல்ல. ஆங்கிலத்திற்கு மாற்றாகவே இந்தியை நாம் ஏற்க வேண்டும்.

இந்தி கட்டாயம்
வெவ்வேறு மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும். வடகிழக்கு மாநிலங்களில் 22,00க்கும் மேற்பட்ட இந்தி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் உள்ள ஒன்பது பழங்குடி சமூகங்கள் தங்கள் பேச்சுவழக்குகளை இந்திக்கு மாற்றியுள்ளன. அங்குள்ள 8 மாநிலங்களும் 10ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்க ஒப்புக்கொண்டன" என்று அவர் கூறியிருந்தார்.

வடகிழக்கு மாநிலங்கள்
அமித் ஷாவின் இந்தக் கருத்திற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலங்னா உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு அரசியல் தலைவர்களும் அமித் ஷாவின் இந்தக் கருத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த எதிர்ப்பு இப்போது தென் மாநிலங்களோடு நிற்காமல், வடகிழக்கு மாநிலங்களுக்கும் பரவி உள்ளது. அனைத்து வடகிழக்கு மாநிலங்களும் இந்தி கட்டாயம் என்ற கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கிளம்பி எதிர்ப்பு
இது தொடர்பாக வடகிழக்கு மாணவர்கள் அமைப்பின் தலைவர் சாமுவேல் பி. ஜிர்வா கூறுகையில், "இந்தி ஒரு விருப்பப் பாடமாக இருப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை, ஆனால் இது ஒரு வகையான மொழி திணிப்பு. இதன் காரணமாகவே இதை நாங்கள் எதிர்க்கிறோம். இந்தி ஒரு விருப்பப் பாடமாக இருக்கலாம், ஆனால், அதைக் கட்டாயப்படுத்தக் கூடாது. இப்போது வடகிழக்கு மாநிலங்களில் உள்ளூர் மொழியைத் தவிர ஆங்கிலம் விருப்ப மொழியாக உள்ளது. இந்தியைக் கட்டாயமாக்கக் கூடாது என்பதை வலியுறுத்த அனைத்து மாநில அரசுகளையும் அணுகுவோம்" என்றார்.

மேகாலயா
இது தொடர்பாக மேகாலயாவில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ அம்பரீன் லிங்டோ கூறுகையில், "காசி மற்றும் கரோ மொழி பேசும் மேகாலயாவில் இந்தி திணிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. அரசியலமைப்புச் சட்டம் 6ஆவது அட்டவணை அனைத்து வகையான திணிப்பையும் எதிர்க்கிறது" என்றார். மேலும் மிசோரமில் செல்வாக்கு மிக்க இளம் மிசோ சங்கமும் இது குறித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுத உள்ளதாக தெரிவித்துள்ளது.

அசாம்
இது ஜனநாயக விரோத நடவடிக்கை என்றும் இது அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும் அசாமின் கிருஷக் முக்தி சங்க்ராம் சமிதி தெரிவித்துள்ளது. "இது நாட்டின் கூட்டாட்சி தத்துவதற்கு எதிரானது. பாஜக அரசு தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2016இல் அசாம் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுகளில் இருந்து அசாம் தாளை நீக்கியது. இப்போது பள்ளிகள் மூலம் இந்தியைத் திணிக்க முயல்கிறது. இதற்குப் பதிலாக மாநில அரசு அசாம் மொழியைக் கட்டாயமாக்க வேண்டும்.

இந்தி பெல்ட்டிற்கு இடமில்லை
மத்திய அரசின் இந்த இந்தி திணிப்பு நடவடிக்கையை மாநில அரசால் எதிர்த்து நிற்க முடியாவிட்டால், பணியமர்த்தப்பட்டும் 22,000 இந்தி ஆசிரியர்கள் உள்ளூர் மக்களாக இருப்பதையாவது உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் இந்தி பெல்ட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

மற்ற கட்சிகள்
அசாம் மாநிலத்தின் ரைஜோர் தளம் மற்றும் அசாம் ஜாதிய பரிஷத் உள்ளிட்ட பிராந்திய அரசியல் கட்சிகளும் இந்த நடவடிக்கையைச் சாடி உள்ளன. இது இந்தி பேசுபவர்களுக்குப் பொருளாதார, கல்வி மற்றும் நிர்வாக ரீதியில் கூடுதல் வாய்ப்பை அளிப்பதாக உள்ளது. நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது இந்தி பேசாத பகுதிகளை இந்தி பேசுவோர் கட்டுப்படுத்தவும் இது உதவும் என்று அவர்கள் சாடி உள்ளனர்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications