"வாவ்.. தமிழகத்திற்கு பிரகாசமான எதிர்காலம்..!" முக்கிய டேட்டாவை பகிர்ந்து பாராட்டிய நார்வே தூதர்
டெல்லி: இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் மாநில வாரியாக ஏற்பட்டுள்ள தொழிற்சாலைகள் வளர்ச்சி தொடர்பாக நார்வே தூதர் எரிக் சொல்ஹெய்ம் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
உலகில் எந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கும் தொழிற்சாலைகள் ரொம்பவே முக்கியம். தொழிற்சாலைகள் எந்தளவுக்கு இருக்கிறதோ அந்தளவுக்குத் தான் நாட்டின் வளர்ச்சி வேகமாக அமையும் என்பதே வல்லுநர்களின் கருத்து.
அதிலும் குறிப்பாக மெகா தொழிற்சாலைகளைக் காட்டிலும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் ரொம்ப முக்கியம். இவை தான் சமூகத்தில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தொழிற்சாலைகள்
இந்தச் சூழ்நிலையில், மத்திய ரிசரவ் வங்கி நாட்டில் மாநில வாரியாக எங்கு அதிக தொழிற்சாலைகள் உள்ளது என்பது குறித்த தரவுகளைக் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது. நமது நாட்டில் அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலம் என்றதும் பலருக்கும் குஜராத் தான் நினைவுக்கு வரும். ஆனால், உண்மையில் குஜராத்தைக் காட்டிலும் தமிழ்நாட்டில் தான் அதிக தொழிற்சாலைகள் உள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது.

நார்வே தூதர்
உலகில் மிகவும் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக நார்வே உள்ளது. இந்த நாட்டின் தூததர் எரிக் சொல்ஹெய்ம் தனது ட்விட்டர் பக்கத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார். தொடர்ச்சியாகப் பல முக்கிய கருத்துகளை அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்து வந்துள்ளார். இந்நிலையில், இந்தியாவில் தொழிற்சாலைகள் வளர்ச்சி எப்படியிருந்துள்ளது என்பதை விளக்கம் வீடியோ ஒன்றை அவர் பகிர்ந்திருந்தார். மேலும் அவர், "தமிழ்நாட்டிற்கு வாழ்த்துகள்.. இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சியில் தமிழ்நாடு எப்படி முன்னிலை வகிக்கிறது என்பதைப் பாருங்கள். பிரகாசமான எதிர்காலம்!" என்று பதிவிட்டுள்ளார்.

டாப் இடத்தில் தமிழ்நாடு
இந்நிலையில் தமிழகத்தில் தொழிற்சாலைகளின் வளர்ச்சி குறித்து விளக்கும் வீடியோ ஒன்றை எரிக் சொல்ஹெய்ம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் கடந்த 20 ஆண்டுகளில் எந்தளவுக்குத் தொழிற்சாலைகள் அதிகரித்துள்ளது என்பது விளக்கப்பட்டுள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டு தமிழகத்தில் 21,122 தொழிற்சாலைகள் மட்டுமே இருந்துள்ளன. இது குறைவாகத் தெரிந்தாலும், அப்போது நாட்டில் இருந்த ஒட்டுமொத்த தொழிற்சாலைகளில் தமிழ்நாட்டில் தான் தொழிற்சாலைகள் அதிகம்.

30 ஆயிரம் தொழிற்சாலைகள்
அப்போது அடுத்தடுத்த இடங்களில் மகாராஷ்டிரா (18,000), ஒருங்கிணைந்த ஆந்திரா (15000) இருந்தன. அப்போதும் கூட 13,500 ஆயிரம் தொழிற்சாலைகளுடன் குஜராத் நான்காம் இடத்தில் தான் இருந்தது. 2004-2005 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளின் எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளது. இருப்பினும், அதன் பிறகு 2007ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை மீண்டும் மிக வேமகாக அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. 2009ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் 30 ஆயிரம் தொழிற்சாலைகள் வந்துவிட்டது. ஆனால், இன்னுமே கூட வேறெந்த மாநிலங்களிலும் 30 ஆயிரம் தொழிற்சாலைகள் என்ற இலக்கை தொடவில்லை.

அடுத்தடுத்து இடங்கள்
ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசம் தான் மூன்றாம் இடத்தில் இருந்தது. அதன் பின்னரே 4ஆம் இடத்தில் குஜராத் இருந்தது. ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட பின்னரே, குஜராத்தால் 3ஆவது இடத்திற்கு வர முடிந்தது. 2014ஆம் ஆண்டு வரை குஜராத்தில் தொழிற்சாலைகள் வளர்ச்சி சாதாரணமாகவே இருந்துள்ளது. 2014ஆம் ஆண்டுக்கு பின்னரே குஜராத்தில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கத் தொடங்கியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 2017-2018 காலகட்டத்தில் தான் மகாராஷ்டிராவை ஓவர்டேக் செய்து குஜராத் இரண்டாம் இடத்தை பிடித்தது.

தமிழ்நாடு
கடைசியாக 2018-19இல் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுடன் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள குஜராத்தை விட தமிழ்நாட்டில் 10 ஆயிரம் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது. குஜராத் (28,000) மகாராஷ்டிரா (25,500) அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. ஆந்திரா 16,900 தொழிற்சாலைகளுடன் நான்காம் இடத்தில் இருக்கும் நிலையில், தெலங்கானா 15,000 தொழிற்சாலைகளுடன் 5ஆம் இடத்தில் உள்ளது. இந்தியாவிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம் 16,000 தொழிற்சாலைகளுடன் 5ஆம் இடத்தில் தான் உள்ளது.
-
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக!












Click it and Unblock the Notifications