இப்படித்தான் போனவாட்டி தேர்தல் நேரத்தில் டிவியில் திடீரென மோடி வந்து என்ன சொன்னார் தெரியுமா
டெல்லி: இன்று மாலை 5.30 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதாக அறிவிப்பு வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், அக்னி ஏவுகணை சோதனை பற்றிய அறிவிப்பை மோடி இன்று வெளியிட்டார். இதேபோல தான் கடந்த 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்பாகவும் இதே போன்ற ஒரு பரபரப்பை ஏற்படுத்தி விண்வெளி திட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் மோடி. அது பற்றி இங்கே பார்க்கலாம்.
2024 லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஓரிரு வாரங்களே உள்ளன. தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் தேர்தல் கூட்டணி மற்றும் பேச்சுவார்த்தையில் ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் பிற மாநிலக்கட்சிகள் மும்முரமாக உள்ளன.

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கடந்த ஒரு சில நாட்களாக பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு, மார்ச் 8 ஆம் தேதி வீட்டு சமையல் கேஸ் சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கடந்த மார்ச் 9 ஆம் தேதி அதாவது அறிவித்த மறுநாளே 100 ரூபாய் சிலிண்டர் விலை குறைப்பு அமலுக்கு வந்தது.
மக்களை கவரும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது. இந்த நிலையில், இன்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதாக அறிவிப்பு வெளியானது. 5.30 மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக பிரதமர் உரை என்றதும் மக்கள் மத்தியில் ஒரு வித பதற்றம் கலந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பணமதிப்பிழப்பு பற்றிய அறிவிப்பா.. அல்லது பெட்ரோல் டீசல் விலை குறைப்பா?
குடியுரிமை திருத்த சட்டம் பற்றிய அறிவிப்பா என பெரும் எதிர்பார்ர்ப்பு ஏற்பட்டது. ஆனால், பிரதமர் மோடி.. 5.30 மணிக்கு தனது எக்ஸ் தளத்தில் அக்னி திட்டம் குறித்த அறிவிப்பை பதிவிட்டு பரபரப்புக்கு முற்று புள்ளி வைத்தார். கடந்த 2019 ஆம் ஆண்டும் தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி இதேபோன்ற ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதாவது அப்போது தேர்தலுக்கு முன்பாக மார்ச் 27 ஆம் தேதி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அப்போதும் இதேபோன்று விண்வெளி தொடர்பான ஒரு அறிவிப்பையே பிரதமர் மோடி வெளியிட்டார். மோடி கூறுகையில், "விண்வெளியில் வலம் வரும் செயற்கை கோளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை செய்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் செயற்கை கோளை அழிக்கும் வல்லமை படைத்த நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றதாகவும் மோடி அப்போது அறிவித்தார். அதாவது, அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்த படியாக இந்தியா மட்டுமே இந்த திறனை பெற்று இருப்பதாகவும் கூறினார். விண்வெளியில் போட்டி அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மிஷன் சக்தி சோதனை நடத்தப்பட்டதாகவும் வேறு எந்த நாட்டிற்கு எதிராகவும் இந்த திறன் பயன்படுத்தப்படாது எனவும் நாட்டு மக்களுக்கு மோடி ஆற்றிய உரையில் கூறியிருந்தார்.
புவியின் சுற்று வட்டப்பாதையில் 300 கிமீட்டர் தொலைவில் செயல்பாட்டில் இருந்த செயற்கை கோளை சுட்டு வீழ்த்துவதற்கான ஏவுகணையை இந்தியா விஞ்ஞானிகள் வெற்றிரமாக செய்ததாகவும் இது அரிய சாதனை எனவும் பெருமை பட கூறியிருந்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications