வந்தே பாரத் லிஸ்ட்லயே இல்லை.. நாட்டில் அதிக லாபம் ஈட்டும் ரயில் எது தெரியுமா? இதோ லிஸ்ட்
டெல்லி: நம் நாட்டில் 13,452 -க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறன்றன. இந்தியன் ரயில்வே சார்பில் இயக்கப்படும் இந்த ரயில்களில் எந்த ரயிலில் அதிக வருவாய் வருகிறது என்பது பற்றியும், எந்த ரயில் நிலையங்களில் அதிக வருவாய் வருகிறது என்பது பற்றியும் இங்கு பார்க்கலாம்.
உலகிலேயே நான்காவது பெரிய ரயில்வே நெட்வொர்க்கை கொண்டது இந்திய ரயில்வேதான். இந்தியாவில் தினமும் இயக்கப்படும் பல ஆயிரக்கணக்கான ரயில்களில் 2 கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கிறார்கள். ஏழை எளிய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை அனைவரும் பயணம் செய்யும் ஒரு பொது போக்குவரத்து என்றால் அது ரயில் மட்டுமே.

இந்தியன் ரயில்வே: இந்தியாவில் தினமும் சுமார் 13,452 க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ, வந்தே பாரத் என சொகுசு ரயில்களும் எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட், பேசஞ்சர் என பல்வேறு விதமான ரயில்கள் தினமும் பயணிகளை சுமந்து செல்கின்றன. சமீப காலமாக நாடு முழுக்க பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதி நவீன சொகுசு வசதிகளுடன் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அதிக வருவாய்: பயணிகள் மத்தியில் இந்த ரயிலுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. அதேவேளையில் கட்டணமும் அதிகமாக உள்ளது என்ற ஆதங்கமும் பயணிகள் மத்தியில் உள்ளது... சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.. இந்தியாவில் அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்கள் எவை என்பது பற்றியும் அதிக வருமானம் ஈட்டும் ரயில்கள் பற்றிய விவரங்களையும் இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டிலேயே அதிக வருமானம் ஈட்டும் டாப் 3 ரயில்கள் எது எல்லாம் என்று இங்கே பார்க்கலாம்..
ராஜ்தானி எக்ஸ்பிரஸ்: நாட்டிலேயே அதிக வருமானம் ஈட்டும் ரயிலாக பெங்களூரில் இயக்கப்படும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் உள்ளது. வண்டி எண் 22692 -என்ற எண் ராஜ்தானி ரயில் ஹஸ்ராத் நிசாமூதினில் இருந்து கேஎஸ்ஆர் பெங்களூர் வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில் தன் 2022-23 நிதி ஆண்டில் ரூ. 1,76,06,66,339- வருமானம் ஈட்டியுள்ளது. இந்த ரயிலில் தோராயமாக 5,09,510 - பயணிகள் பயணம் செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

2வது இடம்:
* இந்த பட்டியலில் இரண்டாவது இடம் சீல்டா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் (12314) ரயில் வகிக்கிறது. கொல்கத்தாவில் இருந்து டெல்லி வரை இந்த ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் கடந்த நிதி ஆண்டில் ரூ. 1,28,81,69,274 - வருமானம் ஈட்டியுள்ளது.
* அதிக வருமானம் ஈட்டும் ரயில்களில் மூன்றாம் இடம் வகிப்பது திப்ருகர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும். டெல்லியில் இருந்து அசாமின் திப்ருகர் வரை இந்த ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் கடந்த நிதி ஆண்டில் ரூ. 1,26,29,09,697 வருவாய் ஈட்டியுள்ளது.

ரயில் நிலையங்கள்: அதேபோல, ஆண்டுக்கு ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் ஈட்டிய ரயில் நிலையங்கள் லிஸ்டில் 7 ரயில் நிலையங்கள் உள்ளன. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள ரயில் நிலையம் ரூ. 3,337 கோடி வருவாயுடன் முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா ஹவுரா ரயில் நிலையம் ரூ.1.692 கோடி வருவாய் ஈட்டி இரண்டாம் இடத்தில் உள்ளது. 3-வது இடத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் ரூ.1,299 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. தெற்கு ரயில்வேயில் இடம் பெற்ற ஒரே ரயில் நிலையம் இது மட்டும்தான்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications