அஜித் தோவலுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. என்னாச்சு? ரஷ்யா பயணம் ரத்தின் பின்னணி
டெல்லி: நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது ரஷ்யா பயணம் என்பது ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அஜித் தோவலுக்கு என்னாச்சு? என்பது குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருப்பவர் அஜித் தோவல். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான இவருக்கு 80 வயது ஆகிறது. தற்போது நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.

நம் நாட்டின் பாதுகாப்பு விஷயங்களில் இவருக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. அஜித் தோவல் அடிக்கடி வெளிநாடு பயணங்களையும் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி நமது நெருங்கிய நட்பு நாடான ரஷ்யாவுக்கு அஜித் தேவால் இன்று முதல் வரும் 29ம் தேதி வரை 3 நாள் சுற்றுப்பயணம் செய்ய இருந்தார். ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் பாதுகாப்பு பிரதிநிதிகளுக்கான 13வது சர்வதேச கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அஜித் தோவல் முடிவு செய்திருந்தார்.
இந்நிலையில் தான் தற்போது அவரது ரஷ்யா பயணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அஜித் தோவலுக்கு திடீர் உடல் நல பிரச்சனை ஏற்பட்டு இருப்பது தான். அதாவது அஜித் தோவல் பருவ காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது ரஷ்யா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த ரஷ்யா பயணத்தில் அஜித் தோவல் பல்வேறு நாடுகளின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருந்தார். மேலும் இந்த பயணம் சாத்தியமாகி இருந்தால் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு அவரது முதல் ரஷ்ய பயணமாக அமைந்து இருக்கும். அதோடு ரஷ்யா - இந்தியா தயாரிப்பான பிரமோஸ் ஏவுகணை, ரஷ்யாவின் எஸ் 400 வான்வெளி தடுப்பு பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்டவை பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது. இதன்மூலம் தான் பாகிஸ்தானை நம் நாடு கலங்கடித்தது.
இதுதொடர்பாக ரஷ்யா - இந்தியா முக்கிய விபரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டு இருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக உடல்நலக்குறைவு காரணமாக அஜித் தோவலின் இந்த ரஷ்ய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மாதம் தொடக்கத்தில் ரஷ்யாவுக்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் செல்ல இருந்தனர். ஆனால் பாகிஸ்தானுக்கும், நம் நாட்டுக்கும் இடையேயான பதற்றம் காரணமாக அவர்கள் பயணத்தை ரத்து செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications