பங்கு சந்தை ஊழல்: சித்ரா ராமகிருஷ்ணா, கூட்டாளி ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ஜாமீன்
டெல்லி: நாட்டை அதிர வைத்த தேசிய பங்கு சந்தை ஊழலில் முக்கிய குற்றவாளிகளான சித்ரா ராமகிருஷ்ணன், அவரது கூட்டாளி ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.
தேசிய பங்கு சந்தை தொடர்பான தகவல்களை பெரும் பணம் பெற்றுக் கொண்டு தனிநபர்களிடம் தரகர்களிடம் பகிர்ந்தது, தேசிய பங்கு சந்தை சர்வர்களை பிற நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதித்தது என ஏராளமான ஊழ முறைகேடுகளில் அதன் முன்னாள் செயல் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணன், அவரது கூட்டாளி ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோர் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இருவர் மீதும் பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி 2015-ம் ஆண்டு முதல் விசாரணை நடத்தி வருகிறது. சிபிஐ 2018-ம் ஆண்டு முதல் விசாரணை நடத்தி வருகிறது. இருவர் மீதும் இத்தனை ஆண்டுகளாகியும் விரைவான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில்தான் ஆனந்த் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து சித்ரா ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். இருவரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
தேசிய பங்கு சந்தை தொடர்பான அத்தனை விவகாரங்களையும் மர்ம யோகி அல்லது சாமியார் ஒருவருக்கு இ மெயில் மூலம் ஒன்றுவிடாமல் தாம் பகிர்ந்ததாக சிபிஐ விசாரணையில் சித்ரா ராமகிருஷ்ணா கூறியிருந்தார். அப்போது, சித்ரா ராமகிருஷ்ணனுக்கு இமயமலை சாமியார் அனுப்பிய இ மெயில்களை சுட்டிக்காட்டி அதாவது நீங்க இளமையாக இருக்கீங்க... செசல்ஸ் தீவுக்கு போய் கடல் குளியல் போடலாம் என்ற விவகாரங்களை வைத்து துருவி துருவி சிபிஐ கேள்வி கேட்டும் சித்ரா வாயே திறக்கவில்லை எனவும் கூறப்பட்டது. இதனால் இன்னமும் அந்த மர்ம சாமியார் என்பதுதான் தெரியவில்லை.
மேலும் சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மீது தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கும் பாய்ந்தது. இந்த நிலையில்தான் சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியன் இருவருக்கும் டெல்லி உயர்நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உள்ளது.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications