உடனே களத்தில் இறங்கிய NSG, NIA.. டெல்லி குண்டுவெடிப்பு.. சிசிடிவி காட்சிகளை சேகரிக்கும் பணி தீவிரம்!
டெல்லி: டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து என்.எஸ்.ஜி. மற்றும் என்.ஐ.ஏ. அமைப்புகள் உடனடியாக விசாரணையை தொடங்கி உள்ளன. குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி பதிவுகளை சேகரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
டெல்லி செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ நிலையத்தின் நுழைவு வாயில் 1 (கேட் 1) அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் இன்று மாலை 6.30 மணியளவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. பயங்கர சப்தத்துடன் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பில் வெடித்துச் சிதறிய காருக்கு அருகில் இருந்த மேலும் 4 கார்களும் தீப்பற்றி எரிந்தன.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் இதுவரை 8 பேர் இறந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. செங்கோட்டை அருகே நிகழ்ந்த இந்த அதிர்ச்சி சம்பவத்தையடுத்து தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடந்த பகுதி, மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாகவும் உள்ளது. சாந்தினி சவுக் சந்தை உள்பட பல முக்கிய பகுதிகள் இதனருகே அமைந்துள்ளன. இந்த சூழலில் கார் வெடித்து சிதறிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. சம்பவ இடத்தில் டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் டெல்லி விமான நிலையம், ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கார் வெடிப்புக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. இது தீவிரவாத தாக்குதலா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. செங்கோட்டை அருகே இச்சம்பவம் நடந்துள்ளதால், இதில் பயங்கரவாத சதித்திட்டம் ஏதேனும் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து என்.எஸ்.ஜி. மற்றும் என்.ஐ.ஏ. அமைப்புகள் உடனடியாக விசாரணையை தொடங்கி உள்ளன. குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி பதிவுகளை சேகரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இந்த சம்பவத்திற்குப் பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக டெல்லி காவல் ஆணையருடன் பேசினார். டெல்லி சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா, உளவுத்துறை இயக்குநருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications