டாப் 100 இடங்களில் 10 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.. வெளியானது திருத்தப்பட்ட நீட் தரவரிசை பட்டியல்
டெல்லி: கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தேசிய முகமை சார்பில் திருத்தப்பட்ட நீட் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் 100 இடங்களில் 10 பேர் தமிழ்நாடு மாணவர்கள் இடம்பிடித்துள்ளனர். அதோடு 720க்கு 720 மதிப்பெண் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை 61ல் இருந்து 17 ஆக சரிந்துள்ளது.
நம் நாட்டில் மருத்துவ படிப்புக்கு நீட் எனும் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இளநிலை மருத்துவ படிப்புக்கு தனியாகவும், முதுநிலை மருத்துவ படிப்புக்கு தனியாகவும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நாடு முழுவதும் கடந்த மே மாதம் 5ம் தேதி இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு என்பது நடத்தப்பட்டது. மொத்தம் 571 நகரங்களில் 4,750 தேர்வு மையங்களில் நடந்த இந்த தேர்வை 24 லட்சத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுதினர். இந்த தேர்வு அன்றைய தினம் மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நடந்தது. அதன்பிறகு ரிசல்ட் வெளியானது.
இதற்கிடையே தான் முறைகேடு புகார் எழுந்தது. தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக கூறப்பட்டது. மேலும் மாணவ-மாணவிகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதால் சர்ச்சை வெடித்தது. இதையடுத்து கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் 1,563 மாணவ-மாணவிகளுக்கு இளநிலை மருத்துவ படிப்புக்கான மறுதேர்வு என்பது நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது.
இந்த முடிவை தொடர்ந்து அதாவது கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட நிலையில் நீட் தேர்வின் புதிய தரவரிசை பட்டியல் வெளியானது. இந்த தரவரிசை பட்டியலில் 17 பேர் முதலிடம் பிடித்துள்ளனர். அதேவேளையில் நீட் தேர்வில் 720க்கு 720 என்று மதிப்பெண் எடுத்தவர்களின் எண்ணிக்கை முதலில் 61 என்று இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 17 ஆக குறைந்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
இதுதவிர திருத்தப்பட்ட நீட் தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் பிடித்த மாணவ-மாணவிகளில் 10 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்த முறை தமிழகத்தில் இருந்து 1.52 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர். இதில் 89,198 பேர் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளனர். மேலும் முதலிடம் பிடித்த 17 பேரில் தமிழகத்தை சேர்ந்த பட்டியலின மாணவர் பி ரஜனீஷ் என்பவரும் ஒருவர் ஆவார்.
இந்த திருத்தப்பட்ட நீட் தேர்வு தரவரிசை பட்டியலை மாணவர்கள் exams.nta.ac.in/NEET/ என்ற இணையதளம் மூலம் பார்த்து கொள்ளலாம். தற்போது இளநிலை மருத்துவ படிப்புக்கான திருத்தப்பட்ட நீட் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதன் அடிப்படையில் கவுன்சிலிங் என்பது தொடங்கி நடைபெற உள்ளது. இந்த கவுன்சிலிங் என்பது நடைபெற உள்ளது.
மேலும் மேற்கூறிய இணையதளத்தில் நீட் இளநிலை தேர்வின் வினாக்களுக்கான விடையும் 52 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதனையும் மாணவ-மாணவிகள் டவுன்லோட் செய்து அறிந்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருக்கும் பட்சத்தில் 011 - 40759000 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications