தனி அறை.. விருந்துக்கு பின் மீட்டிங்.. அமித் ஷா உடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்திய ஓபிஎஸ்.. ஏன்?

நேற்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கொடுத்த விருந்திற்கு பின் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாஜக கட்சியுடன் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வருகிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கூட்டணி கட்சிகளுடனான விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அப்செட்- வீடியோ

    டெல்லி: நேற்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கொடுத்த விருந்திற்கு பின் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாஜக கட்சியுடன் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வருகிறது.

    நாளை லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், நேற்று மத்திய பாஜக அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். நேற்று மாலை தொடங்கிய இந்த சந்திப்பு இரவு 10 மணி வரை நடைபெற்றது.

    டெல்லி பாஜக அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடந்தது. பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆலோசனைக்கு தலைமை தாங்கினார்.

    தமிழகம் தலைவர்கள்

    தமிழகம் தலைவர்கள்

    இந்த ஆலோசனைக்கு பின் பாஜக கூட்டணி தலைவர்களுக்கு விருந்து வைக்கப்பட்டது. இதில் தமிழக அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர். பீகார் முதல்வர் நிதீஷ் குமார், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, அன்புமணி ராமதாஸ், பிரேமலதா விஜயகாந்த், வாசன், சரத்குமார், ஏ.சி.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கிளம்பி சென்றனர்

    கிளம்பி சென்றனர்

    இந்த விருந்து முடிந்த பின் பாஜக கட்சியை சேராத தலைவர்கள் உடனடியாக கிளம்பி சென்றார்கள். தமிழக தலைவர்களும் இரவோடு இரவாக சென்னை கிளம்பி சென்றனர். அதன்பின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, டெல்லியில் இருக்கும் தமிழ்நாடு இல்லத்தில் சென்று தங்கினார். ஆனால் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மட்டும் டெல்லியிலே தங்கிவிட்டார்.

    அதே ஹோட்டல்

    அதே ஹோட்டல்

    தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், விழா நடந்த அசோகா ஹோட்டலிலேயே தங்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹோட்டலில் நேற்று இரவு முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்று தனியாக நடந்து இருக்கிறது. இதில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில்தான் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார் என்று கூறுகிறார்கள்.

    என்ன பேசினார்கள்

    என்ன பேசினார்கள்

    இதில் அமித் ஷா பாஜகவின் அடுத்த கட்ட திட்டங்கள் குறித்து பேசி இருக்கிறார். தேர்தலில் பெரும்பான்மை பெறவில்லை என்றால் என்ன செய்வது என்பது குறித்து இவர்கள் ஆலோசித்ததாக தெரிகிறது. இந்த மிக முக்கியமான பேச்சுவார்த்தையில்தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசி இருக்கிறார்.

    ரகசிய பேச்சுவார்த்தை

    ரகசிய பேச்சுவார்த்தை

    அதேபோல் இந்த சந்திப்பில், தமிழக சட்டசபை இடைத்தேர்தல் குறித்தும், ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டால் என்ன செய்வது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். சுமார் 2 மணி நேரம் இதுகுறித்து பேசி இருக்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் இதனால்தான் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டார் என்கிறார்கள். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் மட்டும் ஹோட்டலில் ஆலோசனையில் கலந்து கொண்டது எடப்பாடி பழனிச்சாமி தரப்பை கொஞ்சம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+