குழந்தைகள் ஆபாச வீடியோக்கள், பெண்களின் பலாத்கார வீடியோக்கள் பதிவீடு.. ரூ 20 க்கு ட்விட்டரில் விற்பனை
டெல்லி: பாலியல் பலாத்காரம் செய்யப்படும் பெண்கள், குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை ட்விட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு அவை ரூ 20 க்கு விற்கப்படுகிறது.
பொதுவாக பாலியல் பலாத்காரம், பாலியல் சீண்டலால் பாதிக்கப்படும் குழந்தைகள், பெண்களின் புகைப்படங்களையோ அவர்களது அடையாளத்தையோ வெளிப்படுத்தக் கூடாது என்பது உச்சநீதிமன்றத்தின் விதியாகும்.
இந்த நிலையில் அவ்வாறு பாலியல் பலாத்காரம் செய்யப்படும் பெண்கள், குழந்தைகளின் வீடியோ ட்விட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

பெண்கள்
இதுகுறித்து டெல்லியில் உள்ள பெண்கள் நலம் மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மலிவால் கூறுகையில், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக ஆபாச புகைப்படங்களும் பலாத்கார வீடியோக்களும் ட்விட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த வீடியோக்களில் குழந்தைகளும் பெண்களும் மிகவும் கொடூரமாக துன்புறுத்தப்படுகிறது.

வீடியோக்கள்
இவற்றில் சில வீடியோக்கள் குழந்தைகளும் பெண்களும் தூங்கும் போது அவர்களை பலாத்காரம் செய்வது போல் இருந்தது. இது போல் குற்றச் செயல்களில் சில ட்விட்டர்வாசிகள் இறங்கியுள்ளனர். இதை பார்க்கும் போது ஒரு பெரிய நெட்வொர்க்கே இருக்கும் என தெரிகிறது. பணத்திற்காக இது போல் ஆபாச வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

ட்விட்டர் ஹேண்டில்
அந்த ட்விட்டர் ஹேண்டில்களும் அதில் வந்த ஆபாச ட்வீட்களும் டெல்லி போலீஸுக்கும் ட்விட்டர் நிறுவனத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது. இது போல் புகார் அளித்தும் ட்விட்டரில் அந்த வீடியோக்களும் புகைப்படங்களும் கொட்டி கிடக்கின்றன. இது குறித்து டெல்லி போலீஸுக்கும் ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய கொள்கை தலைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஆபாச வீடியோ
100- க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்து வரும் நிலையில் அவற்றை இதுவரை டிவிட்டர் நிறுவனம் டெலிட் செய்யாதது ஏன். இது போன்ற குற்றவாளிகளின் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு எதிராக ட்விட்டர் எந்த மாதிரியான நடவடிக்கையும் எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பப்படும்.

சிஸ்டம் மாற வேண்டும்
இந்த ஆபாச வீடியோக்கள் விரைந்து ட்விட்டரில் இருந்து நீக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும். ஆபாச படங்கள், வீடியோக்கள் தானாக டெலிட் செய்யும் சட்ட அமைப்புகளுக்கும் தகவல் அளிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்று கொண்டு வரப்பட வேண்டும்என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications