தேர்தல்தான் முடிஞ்சு போச்சே.. இனி இப்படித்தான்.. தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல்
டெல்லி: பொதுத் தேர்தல் முடிந்த கையோடு, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. கடந்த ஒன்பது நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு 80 பைசா வரை உயர்ந்துள்ளது.
மக்களவை தேர்தலின் கடைசி கட்ட வாக்குப் பதிவு முடிந்த அடுத்த நாளில் இருந்து, விலை அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 83 பைசா அதிகரித்துள்ளது. டீசல் 73 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டதன் காரணமாக, விலை உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. செவ்வாய்க்கிழமை பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 பைசா மற்றும் டீசல் 5 பைசா உயர்த்தப்பட்டது.
டெல்லியில், பெட்ரோல் விலை ரூ. 71.86 ஆக உள்ளது. மே 19ம் தேதியன்று பெட்ரோலின் விலை 71.03 ரூபாயாக இருந்தது. இதேபோல் டீசல் லிட்டருக்கு ரூ.65.96 என்று இருந்த நிலையில், 66.69 ரூபாய்க்கு இன்று விற்பனையாகிறது.
மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 77.47 ஆகவும், டீசல் ரூ. 69.88 ஆகவும் உள்ளது. இதே போல், சென்னையில் பெட்ரோலின் விலை ரூ.74.59 க்கு விற்பனையாகிறது. டீசல் லிட்டருக்கு ரூ. 70.50 ஆக உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர்.
-
டீசல் + ஐசோபியூட்டனால்.. மத்திய அரசின் அடுத்த மெகா திட்டம்.. இதுமட்டும் நடந்துட்டா போதும்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Petrol, Diesel Price: மீண்டும் மீண்டுமா? சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. இன்றைய ரேட் என்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications