ஒன்றல்ல இரண்டல்ல.. தீயாக பரவும் மொத்தம் 9 வேரியண்ட்டுகள்! கொரோனா திடீரென அதிகரிக்க இது தான் காரணமா
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், ஓமிக்ரான் கொரோனா வகைகள் குறித்து ஆய்வாளர்கள் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.
கடந்த 2019 இறுதியில் கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவிய கொரோனா, மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது.
உலகின் எந்தவொரு நாடும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்ப முடியவில்லை. அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் காரணமாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன.

கொரோனா
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகெங்கும் முதல் அலையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து பிரிட்டன் நாட்டில் கண்டறியப்பட்ட ஆல்பா கொரோனா பல நாடுகளில் இரண்டாம் அலையை ஏற்படுத்தியது. இதையடுத்து டெல்டா, ஓமிக்ரான் போன்ற உருமாறிய கொரோனாவால் அடுத்தடுத்து அலைகளை ஏற்படுத்தியது. இதில் டெல்டா கொரோனா தான் இந்தியாவில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த 2021இல் பரவிய டெல்டா கொரோனா நாடு முழுவதும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது.

ஓமிக்ரான்
கொரோனா நோயாளிகளுக்கு ஏற்படும் மூச்சுத் திணறல் திடீரென அதிகரித்ததால், ஆக்சிஜன் தேவை பல மடங்கு அதிகரித்தது. சில இடங்களில் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் உயிரிழந்த சம்பவங்களும் நடந்தன. நல்வாய்ப்பாக மூன்றாவதாகப் பரவிய ஓமிக்ரான் கொரோனா இந்தளவு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஓமிக்ரான் கொரோனா நாடு முழுதும் 3ஆம் அலையை ஏற்படுத்தினாலும், அது தீவிர பாதிப்பை ஏற்படுத்தாமலேயே இருந்தது.

மீண்டும் ஏற்றம்
அதேபோல சில வாரங்களிலேயே ஓமிக்ரான் கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டது. இப்போது வேக்சின் பணிகள் தொடங்கி, பல்வேறு நடவடிக்கைகள் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. உலகம் மெல்ல கொரோனா பரவலுக்கு முந்தைய இயல்பு நிலைக்கும் திரும்பி வருகிறது. இந்தச் சூழலில் தான், இந்தியாவில் பல பகுதிகளில் வைரஸ் பாதிப்பு மீண்டும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. குறிப்பாக, டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது.

8 வேரியண்ட்கள்
இதனிடையே ஓமிக்ரான் கொரோனா மற்றும் அதன் இதர வேரியண்ட்கள் தான் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கக் காரணமாக உள்ளதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். BA.2.12.1 தொடங்கி மொத்தம் 8 வகையான துணை வேரியண்ட்கள் இருப்பதையே காட்டுகிறது. டெல்லியில் நடத்தப்பட்ட மரபணு வரிசைமுறை சோதனைக்குப் பின்னரே, இத்தகவல்களை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஓமிக்ரான் BA.1 வகை வேரியண்டை காட்டிலும் BA.2 வேரியண்ட் வேகமாகப் பரவுவதாக உலக சுகாதார அமைப்பும் எச்சரித்துள்ளது.

பாதிப்பு எந்தளவு
அதேநேரம் BA.2 வேரியண்ட் BA.1 வேரியண்ட்டை விடத் தீவிர பாதிப்பு எதையும் ஏற்படுத்துவதில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பு இதுவரை BA.1, BA.1.1, BA.2, BA.4, BA.5 என மொத்தம் 5 ஓமிக்ரான் வகைகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன. உலகின் பல நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், ஓமிக்ரான் குறித்த ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
Recommended Video

தலைநகர் டெல்லி
தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு மெதுவாக மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த புதன்கிழமை மட்டும் டெல்லியில் 1,009 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு இருந்தது. கடந்த பிப்.10ஆம் தேதிக்குப் பின்னர், பதிவு செய்யப்படும் கொரோனா பாதிப்புகளில் இது தான் மிக அதிகமாகும். அதேபோல டெல்லியில் இப்போது பாசிட்டிவ் விகிதமும் 5.7%ஆகப் பதிவாகி உள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications