பயணிகள் கவனத்திற்கு.. ரயிலின் ஸ்லீப்பர், ஏசி பெட்டிகளில் புது விதி அமல்.. இது தெரியாமல் போகாதீங்க
டெல்லி: ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த சில புதிய விதிகளை ஐ.ஆர்.சி.டி.சி வெளியிட்டுள்ளது. அதன் விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் மக்களின் பயண தேவைகளை பூர்த்தி செய்வதில் ரயில்வேக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.. பாதுகாப்பான மற்றும் பயணம்.. மலிவான கட்டணம்.. ஆகியவை காரணமாக ஏழை எளிய மக்கள் முதல் நடுத்தரமக்கள் ஏன் வசதி படைத்தவர்கள் கூட ரயில் பயணத்தை தான் விரும்புகிறார்கள். குறிப்பாக தொலை தூரங்களுக்கு செல்வது என்றால் முதலில் ரயிலில் டிக்கெட் இருக்கிறதா என்று தான் பெரும்பாலானோர் பார்ப்பதுண்டு.

அதுவும் பண்டிகை காலங்களில் எல்லாம் சொல்லவே வேண்டாம். டிக்கெட் முன் பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் ரயில்களில் டிக்கெட் காலியாகிவிடும். ரயிலில் டிக்கெட் இல்லை என்றால் மட்டுமே பலரும் பேருந்தை பற்றி யோசிப்பார்கள். சரியான நேரத்திற்கு சென்று விடலாம் என்பதோடு... பேருந்துகளை ஒப்பிடும் போது களைப்பு இன்றி பயணம் செய்ய முடியும்.
அதோடு, குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் வசதியான பயணமாக ரயில் இருப்பதால் ரயில் பயணத்தை பலரும் விரும்புவார்கள். பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு ரயில்வே அவ்வப்போது ரயில்வே புதிய விதிகளையும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ரயில்வே ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் லக்கேஜ் கொண்டு செல்வதில் புதிய விதிகளை வெளியிட்டு இருக்கிறது. அது பற்றிய விவரத்தை பார்ப்போம்.
லக்கேஜ்களுக்கான விதிகள்: * ஏசி கோச்களில் ஒரு பயணி அதிகபட்சமாக 70 கிலோ வரையிலான லக்கேஜ்களை கொண்டு வரலாம்.
* ஸ்லீப்பர் கோச்களில் 40 கிலோ வரையிலான லக்கேஜ்களுக்கு கட்டணம் கிடையாது.
* இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் 35 கிலோ எடை வரையிலான உடைமைகளை பயணிகள் எடுத்து வரலாம்.
* அதேபோல் கூடுதல் கட்டணம் செலுத்தி 150 கிலோ வரையிலான லக்கேஜ்களை கொண்டு வரலாம்.
அதவாது ஸ்லீப்பர் கோச்களில் 80 கிலோ வரையிலான லக்கேஜ்களையும் செக்கண்ட் சீட் வகுப்பில் 70 கிலோ வரையிலான லக்கேஜ்களை கொண்டுவரலாம்.
மேலும் சில விதிகள்: * சக பயணிகளுடன் பேசும் போதோ.. அல்லது போனில் பேசும் போதோ அதிக சத்தத்துடன் பேசக்கூடாது.
* செல்போன்கள் ஹெட்போன்கள் இன்றி அதிக சத்தத்துடன் பாடல்களை கேக்கக் கூடாது.
* இரவு நேர விளக்குகளை தவிர வேறு எந்த விளக்குகளையும் இரவு 10 மணிக்கு மேல் எரிய விடக்கூடாது.
* இரவு 10 மணிக்கு மேல் வந்து TTE -க்கள் டிக்கெட்டுகள் செக் செய்யக்கூடாது
* இரவு விளக்குகளை தவிர அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட வேண்டும்.
* மிடில் பெர்த் பயணிகள் எந்த நேரத்தில் வேண்டும் என்றாலும் அதை பயன்படுத்தலாம்... லோயர் பெர்த் பயணிகள் இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கக் கூடாது
* இரவு 10 மணிக்கு மேல் ஆன்லைன் டைனிங் சேவைகள் உணவுகளை விநியோகிக்கக் கூடாது.
* அதேவேளையில் e-catering சேவை மூலம் முன்கூட்டியே உணவை ஆர்டர் செய்து இரவு நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
* ரயில்களில் புகை பிடிப்பது, மது குடிப்பது போன்றவைகளில் ஈடுபடக்கூடது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கண்ட இந்த விதிகள் பயணிகளுக்கு மட்டும் இன்றி ரயில்வே ஊழியர்களுக்கும் பொருந்தும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications