கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்ட நீட் PG தேர்வு.. மாணவர்கள் குமுறல்.. பாஜக அரசை தாக்கிய காங்கிரஸ்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டது தேர்வு எழுத தயாராக இருந்த மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. "பாஜக அரசால் தேர்வுகளை நடத்த முடியவில்லை. இந்த அரசு இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிட்டது" என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைகாக நீட் PG தேர்வு நாடு முழுவதும் 259 நகரங்களில் ஜூன் 23 ஆம் தேதியான இன்று நடைபெற இருந்தது. இந்நிலையில் திடீரென நீட் - முதுநிலை தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரஅமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

On postponing NEET PG exam Congress leader Pawan Khera attacks bjp government

இந்த தேர்வு இன்று ஜூன் 23, ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த நிலையில் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக சனிக்கிழமை சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தேர்வை தேசிய தேர்வு வாரியம் நடத்துகிறது.

இளநிலை நீட் மற்றும் நெட் தேர்வு முறைகேடு புகார்கள் விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. வினாத்தாள் கசிவு, தேர்வு முடிவுகள் குளறுபடிகள் சார்ந்து ஏராளமான மாணவர்களால் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் மத்திய சுகாதாரத்துறை இதனை தெரிவித்துள்ளது.

சில போட்டித் தேர்வுகளின் நேர்மை சார்ந்து எழுந்துள்ள குற்றச்சாட்டை கருத்தில் கொண்டு முதுநிலை நீட் தேர்வின் செயல்முறையின் தன்மையை முழுமையாக மதிப்பீடு செய்யும் நோக்கில் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுத்துள்ளதாகவும். மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்துக்கு வருந்துவதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த திடீர் அறிவிப்பால் நீட் முதுநிலை தேர்வுக்கு தயாரான மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நீட் முதுநிலை தேர்வு எழுதுவதற்காக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்கள் உள்ள இடங்களுக்கு ஏராளமான மாணவர்கள் டிக்கெட் புக் செய்தும், தங்குமிடத்திற்கு பணம் செலுத்தியும் உள்ளனர். இந்நிலையில் இந்த திடீர் அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

NEET-PG தேர்வு ஒத்திவைக்கப்பட்டது குறித்து, FAIMA டாக்டர்கள் சங்க தலைவர் டாக்டர் ரோஹன் கிருஷ்ணன் கூறுகையில், "கடைசி நிமிடத்தில் NEET-PG தேர்வு ரத்து செய்யப்பட்டது எங்கள் அனைவருக்கும் மிகவும் வருத்தமளிக்கிறது. பல்வேறு நகரங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்தத் தேர்வை ஒத்திவைக்க தேசிய தேர்வு வாரியம் உறுதியான காரணங்கள் இருப்பதாக நம்புகிறேன். அடுத்த தேர்வு தேதி போதுமான கால அவகாசத்துடன் வழங்கப்பட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் தலைவர் பவன் கேரா கூறுகையில், "நாளை நடைபெற இருந்த நீட் முதுநிலை தேர்வு இன்று இரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த அரசால் தேர்வுகளை நடத்த முடியவில்லை. இந்த அரசு இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிட்டது.

4 நாட்களுக்கு முன்பு என்.டி.ஏ நேர்மையாக தேர்வுகளை நடத்தி வருகிறது என க்ளீன் சிட் கொடுத்தார் கல்வி அமைச்சர். இப்போது இந்த விசாரணைக்கு யார் காரணம்? இந்த கேள்விகளுக்கு மக்களுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை" என விமர்சித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+