மூளைக்கு வேலை.. இங்கே இருக்கும் 3 குதிரையில் ஒன்று வித்தியாசமாக இருக்கு.. கண்டுபிடிச்சா நீங்க கிரேட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூசன் படத்தில் 3 குதிரைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் ஒரு குதிரை மட்டும் மற்ற இரண்டு குதிரைகளை விட சற்று மாறுபட்டுள்ளது. அதை நீங்கள் 15 செகண்டில் கண்டுபிடித்தால் உண்மையில் நீங்க ஒரு ஜீனியஸ் தான்.

எப்போதும் பரபரப்பாக இருந்து விட்டு ஓய்வு நேரத்தில் இணையத்தில் உலவுவது பலருக்கும் வாடிக்கையான ஒன்றாகவே இருக்கும்.

அதுவும் அதிகமாக சமூக வலைத்தளங்களில்தான் அதிக நேரம் செலவிடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஆப்டிகல் இல்யூஷன்

ஆப்டிகல் இல்யூஷன்

வெறுமனே சமூக வலைத்தளங்கள் என சொல்லிவிட்டாலும் அதிலும் மைண்ட்கேம்கள் என்று சொல்லப்படும் புதிர்கள் மற்றும் ஆப்டிகல் இல்யூஷன் போன்ற படங்களுக்கு நெட்டிசன்கள் மத்தியில் தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. ஒருவரின் கவனிப்புத்திறனை பரிசோதிப்பதோடு, மூளையை கசக்கி பிழியும் வகையிலான பல சுவாரசிய புதிர்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன.

நண்பர்களுக்கு சவால் விடுவது

நண்பர்களுக்கு சவால் விடுவது

இதனால், பலரும் ஓய்வு நேரத்தில் இத்தகைய புதிர்கள் மற்றும் இல்யூஷன் படங்களில் இருக்கும் சவால்களை தீர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். பலரும் தாங்கள் கண்டுபிடித்தது மட்டும் அல்லாமல் தங்கள் நண்பர்களுக்கு இதை பகிர்ந்து அவர்களுக்கு சவால் விடுவதும் அவர்களின் கவனிப்புத்திறனை சோதிப்பது, கலாய்ப்பது என ஜாலியாக பொழுதை போக்குவதை காண முடியும். இதனால், நெட்டிசன்கள் மத்தியில் இந்த புதிர்களுக்கு எப்போதும் தனித்த வரவேற்பு உண்டு.

புதுமையாக சிந்திக்கும் திறன்

புதுமையாக சிந்திக்கும் திறன்

அதிலும் puzzle-களை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் நீங்கள் சற்று வித்தியாசமாக சிந்திக்க வேண்டும். விடைகள் நேரடியாக கிடைக்காது.. எங்கோ மறைந்திருக்கும். பல நேரங்களில் பார்ப்பதற்கு ஒரு மாதிரியும் ஆழ்ந்து பார்த்தால் ஒரு மாதிரியும் என வித்தியாசம் காட்டும். இதனால், புதுமையாக சிந்திக்கும் திறனும் சற்றும் இத்தகைய புதிர்களை கண்டறிய நமக்கு தேவைப்படும்.

 ஒரு குதிரை மட்டும் மாறுபட்டுள்ளது

ஒரு குதிரை மட்டும் மாறுபட்டுள்ளது

அப்படித்தான் இங்கே உங்களுக்கு சவாலான ஒரு puzzle- இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஒரே மாதிரியான 3 குதிரைகள் உள்ளன. இதில் ஒரு குதிரை மட்டும் சற்று வித்தியாசமானது. அது எந்த குதிரை என்பதுதான் உங்களுக்கான டாஸ்க்.. அதுவும் 15 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். சவாலுக்கு ரெடியா இருக்கீங்களா.. படத்தை நல்லா உற்று பாருங்கள்.. வித்தியாசத்தை கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால் உண்மையிலேயே நீங்கள் ஜீனியஸ்தான்.

கண்டுபிடித்தீர்களா...

கண்டுபிடித்தீர்களா...

ஆனாலும், இந்த குதிரையில் வித்தியாசமாக உள்ள ஒரு குதிரையை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல.. ஏனென்றால் அனைத்து குதிரைகளும் ஒரே மாதிரியாகத்தான் முதலில் பார்க்க தெரியும். எப்படி பார்த்தாலும் வித்தியாசம் தெரியவில்லை..போங்கு பண்ணுறீங்களா? என சிலர் முனுமுனுப்பதும் கேட்கத்தான் செய்கிறது. சரி.. விடுங்கள் நாங்களே விடையையும் சுட்டிக்காட்டி விடுகிறோம்.

இது தான் பதில்

இது தான் பதில்

படத்தில் உள்ள மூன்று குதிரைகளில் முதலில் தெரியும் குதிரையின் கால் குளம்புகளை பாருங்கள்.. பிற குதிரைகளை விட அந்த குதிரையின் குளம்புகள் மட்டும் சற்று வித்தியாசமாக தெரியும். மேலோட்டமாக பார்த்தால் எந்த வித்தியாசமும் இல்லையே என்பது போலத்தான் தெரியும். ஆனால் மிகவும் நுணுக்கமாக பார்த்தால் அதில் சிறு வித்தியாசம் உள்ளது. பிற குதிரைகளை விட அந்த குதிரையின் முன் பக்க கால் குளம்பு போல வரையப்பட்டு இருக்கும் கோடுகள் சற்று மெல்லிதாக உள்ளது. ஏனைய இரண்டு குதிரைகளுக்கும் உள்ள கால் குளம்புகள் வரையப்பட்டு இருக்கும் கோடுகள் சற்று தடிமனாக உள்ளது. இதுதான் இந்த படத்தில் உள்ள வித்தியாசம்...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+