பற்றி எரியும் பெட்ரோல் விலை.. ஓராண்டில் இல்லாத புது உச்சம்.. வெங்காயம் விலையும் விர்ர்!
Recommended Video
டெல்லி: நாடு முழுவதும் வெங்காய விலை விண்ணைத் தொடுகிறது. நாட்டின் அனைத்து நகரங்களிலும் வெங்காயத்தின் விலை போட்டிபோட்டு ஏறிக்கொண்டு உள்ளது.
சில தினங்கள் முன்பு வெங்காயம் கிலோ ரூ .15 க்கு விற்கப்பட்டது, இப்போது அதே வெங்காயம் ரூ.80 ஐ எட்டியுள்ளது. இன்று மும்பையில் ஒரு கிலோ 75 முதல் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு, வெங்காயம் டெல்லியில் ஒரு கிலோ ரூ .30 முதல் ரூ .40 வரை விற்கப்பட்டது. ஆனால் அங்கும் இப்போது ரூ.80 ஐ எட்டியுள்ளது.
டெல்லியில் ஒரு கிலோ 80 ரூபாய், மும்பையில் 80 ரூபாய், குருகிராமில் 80 ரூபாய், பாட்னாவில் சுமார் 70 ரூபாய், கொல்கத்தாவில் 70 முதல் 75 ரூபாய் மற்றும் சென்னையில் 60 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனையாகிறது.
நாசிக் நகர வர்த்தகர்கள் சிலர் அளித்த பேட்டியில், வெங்காயத்தின் விலை இப்போதைக்கு, குறையப்போவதில்லை. நாசிக் மொத்த விலை மையத்தில், குவிண்டால் ஒன்றுக்கு 4400க்கு வெங்காயம் விற்பனையாகிறது என்கிறார்கள்.
வெங்காய விலை பெரிய அரசியல் மாற்றங்களுக்கே காரணமாகியுள்ளது. அதிலும் டெல்லி மக்கள் இந்த விஷயத்தில் ரொம்பவே கோபக்காரர்கள். இந்த நிலையில், 80 ரூபாய்க்கு விற்கப்படும் வெங்காயத்தை 24 ரூபாய்க்கு வழங்குவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இதேபோல பெட்ரோல், டீசல் விலை ஒரு வருடத்தில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது, கடந்த இரண்டு மாதங்களில் டீசல் விலை அதிகரித்தபடியே உள்ளது. பெட்ரோல் விலை 29 பைசா உயர்ந்துள்ளது, டீசல் திங்களன்று 19 பைசா அதிகரித்துள்ளது. டெல்லியில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ .73.91 ஆகவும், டீசல் ரூ .66.93 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் இன்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.77.06 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.70.91 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எரிபொருள் விலைகள் செப்டம்பர் 17 முதல் தொடர்ச்சியாக 7வது நாளாக உயர்ந்துள்ளன. 2018, நவம்பர் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக பெட்ரோல் விலை இவ்வளவு உச்சம் தொட்டது இதுதான் முதல் முறை.
-
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications