அட, மறுபடியும் வெங்காயம் ரேட் கூடிப்போச்சே.. நாடு முழுக்க கிடுகிடு உயர்வு.. காரணம் என்ன?
டெல்லி: நாடு முழுக்க, வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இந்த முறை மழை மற்றும் புயல் தாக்கம் இதற்கான காரணமாக கூறப்படுகிறது.
இயற்கை சீற்றத்தால் வெங்காய செடிகள் அழிவடைந்துள்ளதால், இல்லத்தரசிகளை வெங்காய விலை கண்ணீர் விட வைத்துள்ளது. எனவே, மக்கள் குறைந்த அளவுக்கான வெங்காயத்தை வாங்கி வருகிறார்கள்.

தற்போது, வெங்காய விலை மொத்த சந்தையில் கிலோவுக்கு, ரூ. 55 முதல் 60 வரையிலும், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ ரூ .70 முதல் 90 வரையிலும் விற்கப்படுகிறது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ ஒன்றுக்கு, 90 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ரூ. 80 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
தற்போது கர்நாடகாவின் ஹூப்ளி, பெல்லாரி போன்றவற்றைதான் வெங்காய வருகைக்கு மொத்த நாடும் நம்பிக் கொண்டு உள்ளது. அங்கேயும் மழை காரணமாக வெங்காய விளைச்சல் குறைந்துள்ளது.
ஹூப்ளியைத் தவிர வேறு எங்கிருந்தும் புதிய வெங்காயம் வரவில்லை. நாசிக், குஜராத், மஹுவா, பாவ்நகர் ஆகியவற்றிலிருந்து வெங்காய வரத்து, வழக்கம்போல தொடங்கும் போது அடுத்த மாதம் முதல் விலைகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி மாதத்தில், பிப்ரவரி முதல் வாரத்தில், கைர்த்தால், ஆல்வார் மற்றும் சிகார் ஆகிய பகுதிகளில் இருந்தும் வெங்காயம் வரத் தொடங்கும்.
பூண்டு மொத்த சந்தையில் கிலோவுக்கு, 150-160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, சில்லறை விற்பனையில், ஒரு கிலோவுக்கு 180-200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் மளமளவென உயர்ந்த வெங்காய விலை, கிலோவுக்கு ரூ.80 என்ற அளவை தொட்டது. சில வாரங்கள் பிறகுதான் அது குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications