படத்தில் ஒரு சிறுத்தை மறைந்திருக்கு.. கண்ணுக்கு தெரிகிறதா?.. கண்டுபிடிச்சா நீங்க கிரேட் தான்!
டெல்லி: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூசன் படத்தில் ஒரு சிறுத்தை ஒன்று மறைந்திருக்கிறது. இந்த சிறுத்தையை 13 செகண்டுக்குள் கண்டுபிடித்தீர்கள் என்றால் நீங்க ஜீனியஸ் தான்.
தற்போதைய நவீன ஸ்மார்ட் உலகில் எங்கும், எதிலும் பரபரப்பு என ஓடிக்கொண்டு இருப்பவர்கள் ஓய்வு நேரத்தில் அதிகம் உலவுவது இணையத்தில் தான் என்று சொன்னால் மிகையாகாது.
அதிலும் ஆப்டிகல் இல்யூஷன் போன்ற படங்களுக்கு நெட்டிசன்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு உண்டு.

ஒளி மாயை படங்கள்
கண்களை குழப்பி மூளைக்கு வேலை கொடுக்கும் ஒளி மாயை படங்களை பார்த்து அதில் மறைந்து இருக்கும் விஷயங்களை முதலில் கண்டுபிடித்து விட வேண்டும் ஆர்வத்தில் நெட்டிசன்கள் பலர் போட்டி போட்டுக்கொண்டு இத்தகைய இல்யூஷன் படங்களை பகிர்ந்து வருகின்றனர். தங்களின் நண்பர்களுக்கு அனுப்பி அவர்களுக்கு சவால் விடுவது, நான் கண்டுபிடித்துவிட்டேன் என்று பெருமை அடிப்பது என ஓய்வு நேரத்தில் நெட்டிசன்கள் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பரப்பி விடுகிறார்கள்.

கண்களை ஏமாற்றும்
இதுபோன்ற ஆப்டிகல் இல்யூசன் படங்கள் பொதுவாக நேரடியாக மேலோட்டமாக பார்த்தால் நமக்கு எதுவும் தெரியாது. ஆனால், அதை உற்று நோக்கினால் தான், சரியான விடையை கண்டுபிடிக்கும் வகையிலும் இருக்கும். இதனால், சில நேரம் இல்யூஷன் படங்கள் நமது கண்களை ஏமாற்றிவிடும். அப்படிதான் இங்கு ஒரு ஆப்டிகன் இல்யூஷன் படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

13 செகண்ட் டைம்
இணையதளத்தில் நெட்டிசன்களை குழப்பி தலையை பிய்த்துக்கொள்ள வைத்த இந்த இல்யூஷன் படத்தில் ஒளிந்திருக்கும் சிறுத்தையை கண்டுபிடிப்பதே உங்களுக்கான இன்றைய சவால்.. அதுவும் 13 நொடிகளில் கண்டுபிடித்தால் நீங்கள் கிரேட் தான்.. இந்திய வனவிலங்கு புகைப்படக் கலைஞர் ஹிரா பஞ்சாபி என்பவர் தான் இந்த படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் 13 செகண்டில் இதில் மறைந்திருக்கும் சிறுத்தையை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

சிறுத்தை கண்ணுக்கு தெரிந்ததா?
அவர் பதிவிட்டுள்ள இந்த படமானது பனி படர்ந்த ஒரு பெரிய மலையாக இருக்கிறது. மிக உயர்ந்த மலையின் ஒரு பகுதியும் அதற்கு கீழ் பனி படர்ந்த மலையும் இருக்கிறது.. இதில் எங்கு சிறுத்தை இருக்கிறது என்று தான் கண்டுபிடிக்க வேண்டும்... சரி 13 செகண்ட் டைம் எடுத்துக்கோங்க... உங்களால் படத்தில் மறைந்திருக்கும் அல்லது இறைக்காக படத்தில் பதுங்கியிருக்கும் சிறுத்தை உங்கள் கண்களுக்கு தெரிந்ததா...

கண்டுபிடிச்சா கிரேட்
13 செகண்டுக்குள் நீங்கள் அந்த சிறுத்தையை கண்டுபிடித்தீர்கள் என்றால் உண்மையில் நீங்கள் கிரேட் தான்.. இப்போது உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கூடுதலாக டைம் எடுத்துக்கொண்டு.. படத்தை நன்கு உன்னிப்பாக பாருங்கள்... இப்போது தெரிகிறதா? .. இறையை பாய்ந்து பிடிப்பதற்காக அந்த சிறுத்தை பதுங்கியிருப்பதை.. இல்லையென்றால் படத்தின் கீழ் வலது புறம் அந்த சிறுத்தை மறைந்திருப்பதை காணலாம். மேலும் மேலே உள்ள படத்திலும் சிறுத்தை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications