இங்கே ஒரு நாய்க்குட்டி ஒளிஞ்சிருக்கு.. 15 செகண்ட் டைம்.. நீங்கள் ஜீனியஸா? கண்டுபிடிங்க பார்க்கலாம்
டெல்லி: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூசன் படத்தில் ஒரு குட்டி பப்பி நாய் ஒன்று மறைந்திருக்கிறது. இந்த நாய்க்குட்டியை 15 செகண்டுக்குள் கண்டுபிடித்தீர்கள் என்றால் நீங்க ஜீனியஸ் தான்.
இன்றைய நவீன ஸ்மார்ட் உலகில் எங்கும், எதிலும் பரபரப்பு என ஓடிக்கொண்டு இருப்பவர்கள் ஓய்வு நேரத்தில் அதிகம் உலவுவது இணையத்தில் தான் என்று சொன்னால் மிகையாகாது.
அதிலும் ஆப்டிகல் இல்யூஷன் போன்ற படங்களுக்கு நெட்டிசன்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு உண்டு.

ஒளி மாயை படங்கள்
கண்களை குழப்பி மூளைக்கு வேலை கொடுக்கும் ஒளி மாயை படங்களை பார்த்து அதில் மறைந்து இருக்கும் விஷயங்களை முதலில் கண்டுபிடித்து விட வேண்டும் ஆர்வத்தில் நெட்டிசன்கள் போட்டி போட்டுக்கொண்டு இத்தகைய இல்யூஷன் படங்களை பகிர்ந்து வருகின்றனர். தங்களின் நண்பர்களுக்கு அனுப்பி அவர்களுக்கு சவால் விடுவது, நான் கண்டுபிடித்துவிட்டேன் என்று பெருமை அடிப்பது என ஓய்வு நேரத்தில் நெட்டிசன்கள் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பரப்பி விடுகின்றார்கள்...

கண்களை ஏமாற்றும்
பொதுவாக ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நேரடியாக மேலோட்டமாக பார்த்தால் நமக்கு எதுவும் தெரியாது. ஆனால், அதை உற்று நோக்கினால் தான், சரியான விடையை கண்டுபிடிக்கும் வகையிலும் இருக்கும். இதனால், சில நேரம் இல்யூஷன் படங்கள் நமது கண்களை ஏமாற்றிவிடும். அப்படிதான் இங்கு ஒரு ஆப்டிகன் இல்யூஷன் படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

15 செகண்ட் டைம்
இணையதளத்தில் நெட்டிசன்களை குழப்பி தலையை பிய்த்துக்கொள்ள வைத்த இந்த இல்யூஷன் படத்தில் ஒளிந்திருக்கும் நாய்க்குட்டியை கண்டுபிடிப்பதே உங்களுக்கான இன்றைய சவால்.. அதுவும் 15 நொடிகளில் கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ் தான்.. இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் பசுமையான ஒரு பூந்தோட்டம் இருக்கிறது. சுற்றிலும் கலர் கலராய் பூக்கள் பூத்து குலுங்குகின்றன.

நாய்க்குட்டியை கண்டுபிடிச்சீங்களா..
பூந்தொட்ட்டிகளில் அழகான வெள்ளை நிற சிறிய பறவைகள் இருக்கின்றன. பார்ப்பதற்கே ரம்மியான இயற்கை சூழலை கொண்டதாக இந்த இல்யூஷன் படங்கள் உள்ளன. இந்த படத்திற்குள் ஒரு இடத்தில் நாய் குட்டி எங்க.. இருக்குன்னு தேடிட்டு இருக்கீங்களா... படத்தை நல்லா பாருங்க... உங்கள் கண்ணுக்கு நாய்க்குட்டி தென்பட்டதா இல்லையா... 15 செகண்ட்ஸ்ல நாய்க்குட்டியை கண்டுபிடிச்சீங்கன்னா உண்மையிலேயே நீங்கள் ஜீனியஸ்தான் போங்க..

இங்க தான் இருக்கு
கண்டுபிடிக்காதவங்க... கவலைப்பட வேண்டாம்..நாங்க சில டிப்ஸ் தர்றோம்..அதை வச்சி ஈசியா கண்டுபிடிச்சிடலாம்...படத்தை பார்த்ததும் வழக்கம் போல இடது பக்கத்தில் நாய்க்குட்டியை தேடாதீங்க... இப்போ ஒரு சிலர் கண்டுபிடிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறோம்...இப்பவும் கண்டுபிடிக்கலயா... சரி நாங்களே விடையை சொல்லிடுறோம்... படத்தின் வலது பக்க ஓரத்தில் பூந்தொட்டிகளுக்கு பின்னால், பறவையுடன் விளையாடுவதற்கு ஆவலாக பம்மிக்கொண்டு நாய்க்குட்டி ஒளிந்து இருக்கிறது... இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடையை வட்டமிட்டும் காட்டியுள்ளோம்...












Click it and Unblock the Notifications