Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எகிறி அடித்த பட்ஜெட்.. "ஒரே நாடு.. ஒரே பதிவு".. ஒரே குடையின் கீழ் இணைக்கப்படும் திட்டம் இதுதான்..!

ஒரே நாடு ஒரே பதிவின் கீழ் பத்திரப்பதிவு இனி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஒரே நாடு, ஒரே பதிவு திட்டத்தின் கீழ் மாநில பதிவு தரவுகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் இணைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Recommended Video

    #BREAKING மத்திய பட்ஜெட் 2022 -2023 முக்கிய அம்சங்கள்

    மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிர்மலா சீதாராமன், தடுப்பூசி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டதால் பொருளாதாரம் வளர்ச்சியடைய உதவியது என்றும் இளைஞர்கள் தொழில் தொடங்க பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    போக்குவரத்து வசதிகள் உள்கட்டமைப்பு வசதிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறிய நிர்மலா சீதாராமன், நாடு முழுவதும் 400 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும், இயற்கை விவசாய முறை ஊக்குவிக்கப்படும் என்றார்..

    விரிவாக்கம்

    விரிவாக்கம்

    மேலும், 25000 கிமீ தூரத்திற்கு நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் செய்யப்படுவதுடன், கோதாவரி, காவிரி பெண்ணாறு இணைப்பு உள்ளிட்ட 5 நதிகளை இணைக்கும் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தன்னுடைய பட்ஜெட்டில் அறிவித்திருந்தார்.

     ஒரே நாடு ஒரே பதிவு

    ஒரே நாடு ஒரே பதிவு

    அதேபோல பத்திரபதிவு குறித்தும் மிக முக்கிய அறிவிப்பை நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.. நில ஆவணங்களை மின்னணுப்படுத்தும் முறை செயல்படுத்தப்பட்டு வருகின்றது, நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் பத்திர பதிவை மேற்கொள்ள, "ஒரே நாடு, ஒரே பதிவு"திட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.. அதாவது, ஒரே நாடு, ஒரே பதிவு திட்டத்தின் கீழ் மாநில பதிவு தரவுகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் இணைக்கப்படுகிறது..

     நடைமுறை சிக்கல்

    நடைமுறை சிக்கல்

    நிதியமைச்சரின் இந்த அறிவிப்பு பரவலான வரவேற்பை மக்களிடம் பெற்று வருகிறது.. 2018-ல் ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்ய திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.. இந்த திட்டத்தின் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் பத்திரம் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம் என்ற நிலை இருந்தது. ஆனாலும் பத்திரம் பதிவு செய்ய பொதுமக்கள் நேரில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.. இதனால் புரோக்கர்களின் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்த முடியாமல் போனது.

    இடர்பாடுகள்

    இடர்பாடுகள்

    பொதுமக்களிடம் பத்திரப் பதிவுக்கு பல இடங்களில் லஞ்சம் வசூலிக்கப்பதையும் தடுக்க முடியவில்லை.. இப்படி எத்தனையோ இடர்பாடுகள், நடைமுறை சிக்கல்கள் பத்திரப்பதிவில் ஏற்பட்டு வரும் நிலையில், மத்திய அரசின் இந்த ஒரே நாடு ஒரே பதிவு திட்டம், பொதுமக்களுக்கு பலனை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ஒரே நாடு ஒரே ரேஷன் முறை திட்டத்தினால், நடைமுறை சிக்கலை எப்படி களைய முயன்றதோ, அதுபோலவே ஒரே நாடு ஒரே பதிவு பலனை தரும் என்று நம்பப்டுகிறது.

    நவீனமயமாக்கல்

    நவீனமயமாக்கல்

    கடந்த 2008-09-ல், இந்தியாவில் வெளிப்படையான மற்றும் ஒருங்கிணைந்த நிலத் தகவல் மேலாண்மை அமைப்பை உருவாக்குவதற்காகவும், நில ஆவணங்களை டிஜிட்டல் மற்றும் நவீனமயமாக்கவும், டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்கள் நவீனப்படுத்துதல் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.. இதன்மூலம், டிஜிட்டல் முறையில் நில அளவீடு செய்து, நில உரிமை விபரங்களை பதிவு செய்தல், ஊரக பகுதி நிலப்பதிவேடுகள் கணினிமயமாக்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    மறு உருவாக்கம்

    மறு உருவாக்கம்

    அதற்கு பிறகு, 2016-ல் டிஜிட்டல் இந்திய நில ஆவணங்களை நவீனமயமாக்கல் திட்டம் என்று மறு உருவாக்கம் செய்யப்பட்டு, அதற்கான 100% விழுக்காடு நிதியை மத்திய அரசால் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.. இதன் கீழ், நாடு முழுவதும் ஆவணங்கள் மற்றும் சொத்துகளின் பதிவுக்காக "ஒரே தேசம், ஒரே மென்பொருள்" என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது... இப்போதைக்கு மணிப்பூர், மகாராஷ்ரா, உள்ளிட்ட 10 மாநிலங்களில் ஒரே வகையான மென்பொருள் மூலம் ஆவணங்கள் மற்றும் சொத்துகளின் பதிவு செய்யப்பட்டு வருகின்றன... இதன் தொடர்ச்சியாகத்தான், ஒரே நாடு ஒரே பதிவுமுறை கொண்டு வரப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று, அறிவித்துள்ளது பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+